தேவையான பொருள்கள் -
- கேப்பை மாவு - 1 கப்
- பொடித்த அச்சுவெல்லம் - 3/4 கப்
- தேங்காய் துருவல் - 1/2 கப்
- உப்பு - 1 தேக்கரண்டி
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை -
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கேப்பை மாவை போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து லேசாக வறுத்து சிறிது நேரம் ஆற விடவும்.
- ஆறிய பிறகு அதனுடன் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் பிசைந்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் தேங்காய் துருவல், மற்றும் உப்பு நன்றாக கலந்து வைக்கவும்.
- பிறகு இந்த கலவையை இட்லி தட்டில் அல்லது புட்டு குழலில் வைத்து 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
- வெந்ததும் ஒரு பாத்திரத்தில் கேப்பை புட்டு மற்றும் வெல்லத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும். சுவையான கேப்பை புட்டு ரெடி.
அடிக்கடி செய்து சாப்பிடுவது..
ReplyDeleteகேழ்வரகு உடலுக்கு மிகவும் நல்லது..
வாழ்க நலம்..
திடமான உணவு பகிர்வுக்கு நன்றி சகோ
ReplyDeleteஆரோக்கிய உணவு.
ReplyDelete