Thursday, November 21, 2013

பூரிக் கிழங்கு - 2

                                         
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. உருளைக்கிழங்கு - 3
  2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  3. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி 
  4. கடலை மாவு - 1 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு                              
 தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் -1
  5. தக்காளி - 1
  6. பச்சை மிளகாய் - 3
  7. கறிவேப்பிலை - சிறிது                                  
 செய்முறை -
  1. முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும். 
           
  2. குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பின் தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.                                                                        
  3. கடலை மாவை 2 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.                                                                              
  5. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  6. தக்காளி வதங்கியதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  7. கூட்டு கெட்டியாகும் போது கரம் மசாலா, கரைத்து வைத்துள்ள கடலைமாவு இரண்டையும் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சுவையான பூரிக்கிழங்கு ரெடி.

உருளைக்கிழங்கு கூட்டு / Potato curry

பரிமாறும் அளவு - 3 நபருக்கு                                                        

தேவையான பொருள்கள் -
  1. உருளைக்கிழங்கு - 3
  2. மல்லிப்பொடி -2 மேஜைக்கரண்டி
  3. சீரகப்பொடி - 1 தேக்கரண்டி
  4. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு                             
அரைக்க -
  1. தேங்காய்துருவல் - 4 மேஜைக்கரண்டி
  2. சின்ன வெங்காயம் - 4
  3. பச்சைமிளகாய் - 3
  4. தக்காளி - 1 சிறியது                                                                         
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. வெங்காயம் - 1/4 பங்கு
  5. கறிவேப்பிலை - சிறிது                                    

செய்முறை -
  1. குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். நன்றாக ஆறிய பின் தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.                 
  2. தேங்காய், பச்சைமிளகாய், தக்காளி, சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.                               
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் மல்லிப்பொடி, சீரகப்பொடி, மஞ்சள்தூள், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறவும். 
  5. பிறகு 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. மசாலாவாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.
  7. கூட்டு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான உருளைக்கிழங்கு கூட்டு ரெடி. சாம்பார் சாதம், பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறலாம்.

Wednesday, November 20, 2013

அரைத்து விட்ட சாம்பார்

   
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. துவரம்பருப்பு - 50 கிராம் 
  2. முருங்கைக்காய் - 6 துண்டுகள் 
  3. மாங்காய் - 4 துண்டுகள்
  4. கத்தரிக்காய் - 1
  5. கேரட் - 1
  6. தக்காளி -1
  7. மல்லித்தழை - சிறிது 
  8. காயம் - 1/4 தேக்கரண்டி 
  9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  10. உப்பு - தேவையான அளவு                                
     அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 2
  2. கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி 
  3. சீரகம் - 1 தேக்கரண்டி 
  4. மிளகு - 1/2 தேக்கரண்டி 
  5. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி 
  6. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி            
     தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது                                   
     செய்முறை -
  1. குக்கரில் துவரம்பருப்பு, காயம் மற்றும் அது முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணி விடவும்.
  2. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து பருப்பை மசித்து வைத்துக் கொள்ளவும்.
  3. கத்தரிக்காய், கேரட், தக்காளி மூன்றையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  4. அரைக்க கொடுத்தவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  5. குழம்பு வைக்கும் பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள கேரட், கத்திரிக்காய், மாங்காய், முருங்கை, தக்காளி மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
  6. காய்கள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
  7. மசாலா வாடை போனதும் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து நன்றாக கலக்கி விடவும். பருப்பு கொதித்தவுடன் மல்லித்தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  8. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  9. வெங்காயம் பொன்னிறமானதும் சாம்பாரில் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். சுவையான அரைத்து விட்ட சாம்பார் ரெடி.

பருப்பு சாதம் / Dal Rice

                                                   
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. அரிசி - 11/2  கப் 
  2. பருப்பு - 3/4 கப் 
  3. தக்காளி - 1
  4. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 
  5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
  8. உப்பு - தேவையான அளவு 
  9. மல்லித்தழை - சிறிது                                       
     தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. வெங்காயம் - 1/4 கப் 
  5. கறிவேப்பிலை - சிறிது                                  
     செய்முறை -
  1. முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் கழுவி 31/2 கப்  தண்ணீர் சேர்த்து  குக்கரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். 
  2. தக்காளி, வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  3. ஊறிய அரிசி, பருப்புடன் மிளகாய்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், காயத்தூள், உப்பு, நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்றாக கலக்கி மூடி அடுப்பில் வைக்கவும். 
  4. நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும்.
  5. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து மல்லித்தழை சேர்த்து சாதத்தை நன்கு கிளறி விடவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் சாதத்தில் சேர்த்து கிளறி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான பருப்பு சாதம் ரெடி. 

Tuesday, November 12, 2013

உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கூட்டு / Potato Butterbeans Kootu

                                     
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. உருளைக்கிழங்கு - 2
  2. பட்டர்பீன்ஸ் - 100 கிராம்
  3. உப்பு - தேவையான அளவு                            
அரைக்க -
  1.  தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
  2.   தக்காளி - 1
  3.   பச்சை மிளகாய் - 3
  4.   சின்ன வெங்காயம் - 4
  5.  கொத்தமல்லி - 2 மேஜைக்கரண்டி
  6.  சீரகம் - 1 தேக்கரண்டி                                  
தாளிக்க -
  1.  எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2.   கடுகு - 1/2 தேக்கரண்டி
  3.   உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4.   வெங்காயம் - 1/4
  5.   கறிவேப்பிலை - சிறிது                                 
  செய்முறை -
  1. குக்கரில் உருளைக்கிழங்கு, பட்டர்பீன்ஸ் இரண்டையும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். 
  2. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து சிறிது நேரம் ஆற விடவும்.
  3. உருளைக்கிழங்கு ஆறியதும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.      
  4.  அரைக்க கொடுத்தவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
  6.  வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் அரைத்து வைத்த மசாலா, உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ்  மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறவும். 
  7. பிறகு ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கூட்டு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.                      
  8. சுவையான உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ் கூட்டு ரெடி. பூரி, சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

இட்லி உப்புமா / Idli Upma


தேவையான பொருள்கள் -
  1. இட்லி - 4
  2. உப்பு - 1/4 தேக்கரண்டி                                                  
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. பச்சை மிளகாய் - 1
  6. இஞ்சி - 1 இன்ச் அளவு 
  7. கறிவேப்பிலை - சிறிது                                   
     செய்முறை -
  1. முதலில் இட்லிகளை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
  2. வெங்காயம், மிளகாய், இஞ்சி மூன்றையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் உதிர்த்து வைத்துள்ள இட்லியை சேர்த்து 1 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.                       
  5. உப்பு தேவைப்பட்டால் 1/4 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். சுவையான இட்லி உப்புமா ரெடி.

Monday, November 11, 2013

ஈசி மட்டன் குழம்பு / Easy Mutton Curry

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. மட்டன் - 300 கிராம்  
  2. உப்பு - தேவையான அளவு 
  3. மல்லித் தழை - சிறிது                                     
      அரைக்க -
  1. மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி 
  2. மல்லித் தூள் - 2 மேஜைக்கரண்டி 
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. சோம்புத் தூள் - 1/2  தேக்கரண்டி
  6. சீரகத் தூள் - 1 தேக்கரண்டி 
  7. பட்டை - 1 இன்ச்
  8. கிராம்பு - 1
  9. ஏலக்காய் - 1
  10. தேங்காய் துருவல் - 6 மேஜைக்கரண்டி
  11. சின்ன வெங்காயம் - 10
  12. மல்லித்தழை - சிறிது                                       
    தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. வெங்காயம் - 1/4 
  5. கறிவேப்பிலை - சிறிது                                 
     செய்முறை -

  1. முதலில் மட்டனை நன்றாக கழுவி நீரை வடித்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.      
  2. அடுப்பில் குக்கரை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் மட்டனை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.           

  4. பிறகு அரைத்த கலவையுடன் 300 மில்லி தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொதிக்க வைக்கவும்.
  5. கொதித்ததும் குக்கரை மூடி விடவும். நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.                            
  6. 25 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான மட்டன் குழம்பு ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...