Wednesday, September 30, 2015

சேப்பங்கிழங்கு ப்ரை / Sepang Kizangu Fry

வீட்டில் அடிக்கடி உருளைக்கிழங்கு ப்ரை தான் செய்வோம். இப்போது சேப்பங்கிழங்கை வைத்து சிறிது வித்தியாசமாக சேப்பங்கிழங்கு ப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போம் !
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சேப்பங்கிழங்கு - 8
  2. தக்காளி -1
  3. மல்லித்தழை - சிறிது 
  4. சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  5. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. கரம் மசாலா பொடி - 1/2 தேக்கரண்டி 
  8. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
  9. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  2.  சோம்பு - 1/2 தேக்கரண்டி 
  3.  பெரிய வெங்காயம் - 1
  4.  கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. வெங்காயம், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சேப்பங்கிழங்கு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  3. கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு 20 நிமிடங்கள் வைத்து வேக வைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  4. ஆறிய பிறகு தோலுரித்து வட்ட வட்டமாக வெட்டி வைக்கவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கடாய் கொள்ளும் அளவுக்கு கிழங்குகளை போட்டு பொன்னிறமாக பொரித்து தனியே ஒரு தட்டில் வைக்கவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை போடவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  7. தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள்,  மஞ்சள் தூள், கரம் மசாலா பொடி சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் பொரித்து வைத்திருக்கும் சேப்பங்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
  8. இறுதியில் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான சேப்பங்கிழங்கு ப்ரை ரெடி.

20 comments:

  1. வணக்கம் சகோ கோவிலுக்குப் போய் வந்ததும் சேப்பக்கிழங்கு ஃப்ரை ஸூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை கண்டு மகிழ்ச்சி சகோ.

      Delete
  2. ஆஹா... நாமளும் செய்து பார்த்திட வேண்டியதுதான் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்து கருத்து சொல்லுங்கள் குமார்.

      Delete
  3. செய்து பார்க்கிறேன் அம்மா,

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் மகேஸ்வரி.

      Delete
  4. நான்கு நாளைக்கு முன்புதான் சேப்பங்கிழங்கு என நினைத்து கருணை கிழங்கை வாங்கி வந்து வீட்டில் பல்பு வாங்கினேன். அடுத்த முறை கரெக்டா வாங்கிட்டு வந்து பண்ணிடனும். சூப்பரா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்து பார்த்து போட்டோ எடுத்தால் கருத்தோடு இணையுங்கள் அபிநயா.

      Delete
  5. நாக்கில் நீர் ஊறுகிறது!

    ReplyDelete
  6. வாவ்...சூப்பர் சாரதாம்மா...ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு...

    இந்த வாரம் செஞ்சுட வேண்டியது தான்..

    ReplyDelete
  7. செய்து பாருங்கள் ஷமி.

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி.!

    சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்முறை மிகவும் அற்புதமாய் விவரித்திருக்கிறீகள்.
    படங்களை பார்க்கும் போதே செய்து சாப்பிட தூண்டுகிறது. அவசியம் ஓர்நாள் தங்கள் பாணியில் செய்து பார்க்கிறேன்.

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. கண்டிப்பாக செய்து பாருங்கள் சகோதரி. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. உங்க ப்ளஸ் நீங்க படத்தோடு அருமையா விபரிப்பது. அதனாலேயே செய்துபார்க்க தூண்டுகிறது. சேப்பங்கிழங்கு இங்கு கிடைக்குமா தெரியலை.விசாரிக்கிறேன் அக்கா.கருணைக்கிழங்கு கிடைக்கும்.

    ReplyDelete
  11. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி பிரியசகி.

    ReplyDelete
  12. அம்மா பார்க்காவே அழகாக உள்ளது. இதனை செய்து சாப்பிட வேண்டும்.

    ReplyDelete
  13. I tried it. Very very yummy ma. Thank u ma.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...