Monday, August 31, 2015

வாழைக்காய் பொடி கறி / Vazhakkai Podi Curry


 பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வாழைக்காய் - 1
  2. புளி - நெல்லிக்காய் அளவு 
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு 
வறுத்து பொடிக்க -
  1. மிளகாய் வத்தல் - 2
  2. கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி 
  3. கடலைப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி 
  4. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. காயத்தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் எல்லாவற்றையும் போட்டு பொன்னிறமாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  2. ஆறிய பிறகு மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும்.
  3. புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பிறகு நன்றாக கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  4. புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் வாழைக்காயை இரு துண்டுகளாக வெட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வேக வைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  5. ஆறிய  பிறகு சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் காயத்தூள், கறிவேப்பிலை சேர்க்கவும்.
  7. பிறகு அதனுடன் வாழைக்காய் துண்டுகள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். 
  8. இறுதியில் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான வாழைக்காய் பொடி கறி ரெடி.

25 comments:

  1. அட இதுவரை நான் கேள்விப் படவில்லையே இது மாதிரி. பார்க்கவே அழகாக உள்ளது . உடனும் சாப்பிடவேண்டும் போல்..ம்..ம்..ம் .... உடனே செய்து விட வேண்டியது தான். நன்றி நன்றி அசத்துங்கம்மா அசத்துங்க
    வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை தந்து சொன்ன கருத்து அசத்தல் சகோ.

      Delete
  2. வணக்கம்.
    இந்த முறையும் அருமையாக இருக்கு. செய்துபார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் மகேஸ்வரி.

      Delete
  3. வாழைக்காய் பொடிகறி பார்க்கவே யம்மியா இருக்கு. கிடைக்கும்ப்போது கண்டிப்பா செய்கிறேன்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பிரியசகியின் வருகை கண்டு மகிழ்ச்சி.

      Delete
  4. புது மாதிரியாக இருக்கின்றதே!..
    நாளைக்கு செய்து விடலாம்!..

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு செய்து பார்த்து மீண்டும் கருத்திடுங்கள் சார்.

      Delete
  5. வணக்கம் சகோதரி!
    வாழைக்காய் பொடி கறி
    எங்களது வீட்டில் அடிக்கடி செய்வார்கள்.
    ஆனால் அதற்கு பெயர் வாழைக்காய் பொடிமாஸ் என்பார்கள்.
    அது பொடிமாஸ் என்றாலும் தங்களது செயல்வடிவம் கிளாஸ்.
    நன்றி சகோதரி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. உங்கள் கருத்தின் மூலம் பொடிமாஸ் என்ற பெயரை தெரிந்து கொண்டேன் சகோ.

    ReplyDelete
  7. வித்தியாசமான முறை.ருசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. பாட்டி வீட்டீல் சாப்பிட்ட நினைவு! படங்களுடன் எளிமையாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சார்.

      Delete
  9. ஆஹா புகைப்படமே அசத்தல் ஏக்கப் பெருமூச்சுதான் வருகிறது

    ReplyDelete
    Replies
    1. சகோவின் வருகை கண்டு மகிழ்ச்சி.

      Delete
  10. வணக்கம் சகோதரி.

    அழகான படங்களுடன் பக்குவமாய் செய்முறை விளக்கங்களும் அருமை சகோதரி.! புது மாதிரியாக நல்ல சுவையுடன் ௬டிய முறையில், வாழைக்காய் கறியை அறிமுகபடுத்தியமைக்கு நன்றி. விரைவில் இந்த முறைப்படி செய்து பார்க்கிறேன். நன்றி சகோதரி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  11. வாங்க சகோதரி விரிவான முறையில் சொன்ன கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  12. நளபாகத்தில் முயற்சி செய்ய வேண்டியதுதான்!

    ReplyDelete
  13. அம்மா பொடிக் கறி நல்லாயிருக்கு தேங்காய் சேர்க்காமல் கறிபொடி பண்ணி வைத்திருக்கேன் அதை யூஸ் பண்ணா நல்லா இருக்கு மா?

    ReplyDelete
  14. அபிநயாவின் முதல் வருகைக்கு நன்றி. பொடி கறி நன்றாக இருப்பதாக சொல்லி இருக்கீங்க. தேங்காய் துருவல் சேர்த்து செய்தாலும் நன்றாக இருக்கும். அன்று சுவை நன்றாக இருந்ததால் தான் பதிவும் கொடுத்தேன். தொடர்ந்து வருகை தந்து கருத்துக்களை சொல்லுங்கள்.

    ReplyDelete
  15. என்னவருக்கு மிகவும் பிடிக்கும் செய்து பார்த்துட்டு சொல்கிறேன் தொடர்ந்து வருகை தருவேன் அம்மா நன்றி

    ReplyDelete
  16. yummy poriyal. i use to make at our homes. i hope u forgot my blog. when u find time plz visit.

    ReplyDelete
  17. இங்கே வாழைக்காய் கிடைக்காது. பார்க்க செய்ய வேண்டும் போல் உள்ளது! பகிர்வுக்கு நன்றி! :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...