Monday, August 17, 2015

பரோட்டா / Parotta


பரிமாறும் அளவு - 3 நபருக்கு (10 பரோட்டா)

 தேவையான பொருட்கள் -
  1. மைதா - 750 கிராம்
  2. உப்பு - தேவையான அளவு
  3. முட்டை - 1
  4. சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி
  5. பால் - 125 ml
  6. தண்ணீர் - தேவைக்கேற்ப 
செய்முறை 
  1. முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  2. அதில் முட்டை மற்றும் வெதுவெதுப்பான பால் சேர்த்து பிசையவும்.
  3. பிறகு தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் நன்றாக பிசையவும். சப்பாத்தி மாவை விட கொஞ்சம் அதிகமாக தண்ணீர் சேர்த்து தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
  4. ஒரு நனைந்த துணியை வைத்து மூடி மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மறுபடி 5 - 10 நிமிடம் வரை பிசையவும். மறுபடி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  5. பிறகு அதை கொஞ்சம் பெரிய  உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருட்டும் பொது கொஞ்சம் நன்றாக அழுத்தம் கொடுத்து உருட்டி கொள்ளவும். கிட்டதட்ட 10 உருண்டைகள் வரை வரும். லேசாக எண்ணெயை மேலே தடவி 15 நிமிடம் ஊற விடவும்.
  6. ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் எண்ணெய் இன்னொரு கிண்ணத்தில் கொஞ்சம் மைதா மாவு எடுத்துக் கொள்ளவும். பூரி கட்டை மற்றும் தேய்க்கும் கல் அனைத்திலும் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
  7. ஒரு உருண்டை மாவை எடுத்து எவ்வுளவு மெலிதாக பூரி கட்டையால் தேய்க்க முடியுமோ அது வரை தேய்க்கவும். தேய்க்கும் பொது மாவு சுருங்கினால் எண்ணெய் தடவி கொள்ளவும். பிறகு கையை வைத்து எல்லா ஓரங்களிலும் முடிந்த அளவுக்கு இழுத்து விடுங்கள். 
  8. பிறகு அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி எல்லா இடங்களிலும் படுமாறு தடவி விடுங்கள். பிறகு கொஞ்சம் 1/2 மேஜைக்கரண்டி மைதா மாவை தூவி தடவி விடுங்கள். பிறகு அதை விசிறி போல் மடிக்கவும்.
  9. பிறகு அதை சுருட்டி விடவும். லேசாக எண்ணெய் மேலே தடவி ஈர துணியால் மூடி விடவும்.
  10. அணைத்து உருண்டையும் இவ்வாறு செய்து ஈர துணியால் மூடி விடவும்.
  11. அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடு படுத்திக் கொள்ளவும். ஒரு சுருட்டிய உருண்டையை எடுத்து பூரி கட்டையால் தேய்த்துக் கொள்ளவும்.
  12. தோசை கல்லில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு இரு புறமும் நன்றாக சிவந்து வேகும் வரை மாற்றி போட்டு எடுத்து விடுங்கள்.
  13. மூன்று பரோட்டா போட்டதும் எல்லாம் சேர்த்து வைத்து அடித்துக் கொள்ளுங்கள்.
  14. சுவையான பரோட்டா ரெடி. சிக்கன் அல்லது மட்டன் குழம்பு அல்லது வெஜ் குருமாவுடன் சேர்த்து சாப்பிடவும்.

14 comments:

  1. அருமையாக செய்துள்ளீர்கள்...

    ReplyDelete
  2. காலையில் சாப்பிட்டாகி விட்டது..
    ஆனாலும், பசியைக் கிளப்புகின்றது பரோட்டா!..

    ReplyDelete
    Replies
    1. பசி வந்தால் எடுத்து சாப்பிட்டிருக்கலாமே சார். வருகைக்கு நன்றி.

      Delete
  3. நலமா அக்கா.! பரோட்டா நன்றாக செய்திருக்கிறீங்க. முட்டையில்லாமலும் செய்யலாம்தானே.!

    ReplyDelete
    Replies
    1. வாங்க பிரியசகி உங்கள் பிரயாணம் நல்ல படியாக முடிந்தததா ? பரோட்டா முட்டை இல்லாமலும் செய்யலாம். முட்டையும், பாலும் சேர்ப்பதால் நல்ல சாப்ட் ஆக இருக்கும்.

      Delete
  4. அனைவருக்கும் பிடித்தது புரோட்டா. தங்களின் இப் பதிவும்.

    ReplyDelete
  5. ஏதேது? மைதாவுக்கு டாட்டா சொன்னவர்களும்,
    தங்களது பதிவை படித்து,
    செயல் முறை விளைக்கம் அறிந்து கொண்டால்?
    "வீடுகளில் புரோட்டா வாரம் "
    கொண்டாட புறப்பட்டு விடுவார்கள் சகோதரி!

    அதுசரி இதை எப்படி சாப்பிடுவது?
    மன்னிக்கவும்!!!!
    எப்படி அழைப்பது ???

    பரோட்டாவா?

    அல்லது

    புரோட்டாவா?

    சகோ. பாலமகி பக்கங்களில் இதற்கான விளக்கத்தை பார்த்துக் கொள்கிறேன்.

    நன்றி சகோதரி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. பரோட்டாவை புரோட்டா என்றும் சொல்லலாம். கருத்துக்கு நன்றி சகோ.

      Delete
  6. புரோட்டாவின் சுருட்டல் சிங்குகளின் டர்பன் போலவே அழகாக இருக்கிறது

    ReplyDelete
  7. புரோட்டாவின் சுருட்டலை ரசித்தமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  8. வணக்கம்,
    பரோட்டா அருமையா இருக்கு, கோதுமை மாவில் சொல்லிக்கொடுங்கம்மா,,,,,,,
    மைதா நல்லதில்லை என்கீறார்கள்.
    நன்றி

    ReplyDelete
  9. பசியை தூண்டுது பதிவைப்படித்த பின் பரோட்டா.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...