பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- துவரம் பருப்பு - 100 கிராம்
- காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
- சுரைக்காய் - 100 கிராம்
- தக்காளி -1
- புளி - நெல்லிக்காய் அளவு
- பச்சை மிளகாய் - 1
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி
- சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 4
- கறிவேப்பிலை - சிறிது
- குக்கரில் பருப்புடன் காயத்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போடவும். 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- நீராவி அடங்கியதும் மூடியை திறந்து பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும்.
- சுரைக்காய், தக்காளி இரண்டையும் பொடிதாகவும், பச்சை மிளகாயை இரண்டாகவும் கீறி வைக்கவும். புளியை 50 மில்லி தண்ணீரில் ஊற வைக்கவும்.
- புளி ஊறியதும் 200 மில்லி தண்ணீர் அளவுக்கு கரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள சுரைக்காய், தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பிறகு அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
- பிறகு கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீருடன் உப்பும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
- பச்சை வாடை போனதும் அவித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து நன்றாக கலக்கி நுரை கூடி வரும் போது மல்லித்தழையை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- சாம்பாரை பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான சுரைக்காய் சாம்பார் ரெடி.
ஆஹா ரூமிலும் இப்பொழுது சாம்பார்தான் செய்து கொண்டு இருக்கிறோம்.
ReplyDeleteஉங்கள் செய்முறையும் இங்கு குறிப்பிடுங்கள் சகோ.
Deleteருசித்தேன். நன்றி.
ReplyDeleteவருகை கண்டு மகிழ்ச்சி சார்.
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
ஆகா... ஆகா.. செம கலக்கல் சமயல் அம்மா நிச்சயம் செய்து சாப்பிடுகிறோம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
செய்து சாப்பிடுங்கள் ரூபன். வருகை கண்டு மகிழ்ச்சி.
Deleteஇனி இல்லங்களில் நாளும் கிழமைகளில் சுவைமிகு சுரைக்காய் சாம்பார் ஆவி பறக்கும்! என்பது உண்மை சகோதரி!
ReplyDeleteஅடடே ஆடிக் கிருத்திகை போய் விட்டதே?
சரி போகட்டும் வெள்ளிக் கிழமை மெனு ரெடி!
நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
சகோவின் வருகையும் கருத்தையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
Deleteசுரைக்காய் சாம்பார்... சூப்பர்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி அம்மா...
கருத்துக்கு நன்றி குமார்.
Deleteசெய்முறை விளக்கத்திற்கு நன்றி அம்மா...
ReplyDeleteகருத்துக்கு நன்றி சார்
Deleteசுரைக்காயில் சாம்பார் கூடச் செய்யலாமா?
ReplyDeleteநன்றி
செய்யலாம் சார். வருகைக்கு நன்றி.
Deleteஇங்கே அடிக்கடி சுரைக்காய் சாம்பார் தான்!..
ReplyDeleteஅதிலும் வாரத்தில் ஒரு நாள் இயற்கை உணவாக - தவறாமல் இடம் பெறும் காய்களுள் சுரைக்காயும் ஒன்று!..
Deleteஅடிக்கடி சுரைக்காய் சாம்பார் வைப்பதை தெரிந்து கொண்டேன் சார்.
வணக்கம்மா,
ReplyDeleteசுரைக்காய் சாம்பார் வைப்பேன்,
இப்படியும் செய்து பார்க்கிறேன்.
நன்றி.
நன்றி மகேஸ்வரி.
ReplyDeleteசுரைக்காய் சாம்பார் அருமை செய்து பார்க்கணும். நன்றி !
ReplyDelete