Monday, August 24, 2015

பீன்ஸ் பருப்பு உசிலி / Beans Paruppu Usili

பீன்ஸ் பருப்பு உசிலி பாரம்பரிய தென் இந்திய உணவுப் பொருளாகும். இந்த பருப்பு உசிலி மிகவும் சுவையாக இருக்கும். இனி பீன்ஸ் பருப்பு உசிலி எப்படி செய்வதென்று பார்ப்போம் !
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பீன்ஸ் - 100 கிராம் 
  2. துவரம்பருப்பு - 25 கிராம் 
  3. கடலைப்பருப்பு - 25 கிராம் 
  4. மிளகாய் வத்தல் - 3
  5. சீரகம் - 1 தேக்கரண்டி 
  6. காயத்தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற  வைக்கவும்.
  2. ஊறிய பிறகு தண்ணீரை நன்கு வடித்து விட்டு அதோடு காயத்தூள், மிளகாய் வத்தல், சீரகம், சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு பருப்பு கலவையை வடை போல் தட்டி இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வைத்து வேக வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
  4. ஆறிய பிறகு கையால் உதிர்க்கவும் அல்லது மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தால் கலவை மென்மையாகி விடும்.
  5.  பீன்ஸை  பொடிதாக நறுக்கி வைக்கவும். ஒரு கடாயில்  50 மில்லி தண்ணீர் ஊற்றி அதோடு நறுக்கி வைத்துள்ள பீன்ஸ், மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும்.
  6. அடுப்பில் அதே  கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும்.
  7. பிறகு அதனுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பு கலவையை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாகும் வரை கிளறவும்.
  8. பிறகு அதனுடன் மஞ்சள்தூள், மற்றும் பீன்ஸை  சேர்த்து நன்றாக கிளறி உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பீன்ஸ் பருப்பு உசிலி ரெடி.

16 comments:

  1. அடடே புதுமையாக இருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. வருகை கண்டு மகிழ்ச்சி சகோ.

      Delete
  2. பாரம்பர்ய உணவுகளில் ஒன்று..

    ReplyDelete
    Replies
    1. நானும் அதை தான் தலைப்பில் சொல்லி இருக்கிறேன் சார்.வருகைக்கு நன்றி.

      Delete
  3. மிக எளிமையாக கற்றுத் தருகிறீர்கள்! சிறப்பான உணவு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சார்.

      Delete
  4. எளிய செய்முறை விளக்கம்.(நான் இப்படித்தான் செய்வேன்!)
    பருப்புசிலி இல்லாத விருந்துச் சாப்பாடு உண்டோ?

    ReplyDelete
    Replies
    1. வருகை கண்டு மகிழ்ச்சி சார்.

      Delete
  5. தங்களுடைய வலைப்பூவில் விரைவில் இணைய வருகிறேன் சார்.

    ReplyDelete
  6. அருமையான விளக்கம் செய்து பார்க்கின்றேன்.

    ReplyDelete
  7. ஆஹா... இப்படிச் செய்து பார்க்கணும்...

    ReplyDelete
  8. கொத்தவரங்காய் பருப்புசிலி தான் தெரியும், பீன்ஸிலிமா? செய்துபார்க்கிறேன். வாழ்த்துக்கள் அருமையான எளிய விளக்கம்.

    ReplyDelete
  9. வணக்கம் சகோதரி.

    அருமையான படங்கள். ஒவ்வொரு செய்முறையிலும் தனித்தனியே படமெடுத்து பீன்ஸ் உசிலியை எளிதில் புரிந்து கொள்ளும்படி அழகாய் ௬றியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.! நானும் அடிக்கடி இதை செய்திருக்கிறேன். இருப்பினும் தங்கள் பகிர்வு உசிலியை மற்றொரு முறை செய்து சாப்பிடும் ஆவலை அதிகமாக்குகிறது. நன்றி சகோதரி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...