Thursday, August 13, 2015

சிக்கன் ப்ரை / Chicken Fry


தேவையான பொருட்கள் -
  1. எலும்புடன் உள்ள பெரிய சிக்கன் துண்டுகள் - 8
  2. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
ஊற வைப்பதற்கு -
  1. சின்ன வெங்காயம் - 5
  2. மிளகாய் பொடி - 1 மேஜைக்கரண்டி
  3. பச்சை மிளகாய் - 1 
  4. கொத்தமல்லி பொடி - 1 மேஜைக்கரண்டி 
  5. சீரக பொடி - 1 தேக்கரண்டி 
  6. சோம்பு - 1 தேக்கரண்டி 
  7. பட்டை - 1
  8. கிராம்பு - 4
  9. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  10. தயிர் - 1/4 கப் 
  11. எலும்பிச்சை சாறு  - 2 மேஜைக்கரண்டி 
  12. கொத்தமல்லி தழை - சிறிது 
  13. கறிவேப்பில்லை - சிறிது 
  14. உப்பு - தேவையான அளவு 
செய்முறை -
  1. ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அணைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு தண்ணீர் இல்லாமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவைபட்டால் சிறிது மட்டுமே தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  2. சிக்கனை நன்றாக கழுவி தண்ணீர் சிறிதும் இல்லாமல் வடித்துக் கொள்ளவும். கத்தியால் சிக்கனில் கீறல் போட்டுக் கொள்ளவும்.  
  3. அதன் மேல் அரைத்த கலவையை சேர்த்து எல்லா இடங்களிலும் படுமாறு நன்றாக தடவி குறைந்தது ஒரு மணி நேரம் ஊற விடவும்.
  4. ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைக்கவும். தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் சிக்கன் துண்டுகளை போட்டு வறுக்கவும்.
  5. சிம்மில் வைத்து எல்லா புறமும் நன்றாக திருப்பி போட்டு வேக விடவும். வெந்து நன்றாக சிவந்ததும் சிக்கனை எடுத்து விடவும்.
  6. அடுத்து மற்ற சிக்கன் துண்டுகளை போடும் போது  எண்ணெயில் உள்ள மசாலா கலவையை எடுத்து விட்டு போடவும்.
  7. சுவையான சிக்கன் ப்ரை ரெடி.

13 comments:

  1. வணக்கம்,
    என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும், தாங்கள் தந்துள்ள செயல்முறைகள் படி செய்து பார்க்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்து கருத்து சொல்லுங்கள் மகேஸ்வரி.

      Delete
  2. புகைப்படங்களைப் பார்த்ததும அதிக ஆசை வந்துவிட்டது.

    ReplyDelete
  3. ஆஹா புகைப்படங்களே தூக்கலாக இருக்கிறதே...

    ReplyDelete
  4. வணக்கம்
    அம்மா

    சுவைக்க ஆசைதான் ஆனால் சுவைக்க முடியாது... செய்முறை விளக்கத்துடன் அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி ரூபன்.

    ReplyDelete
  6. நாவானது நமஸ்காரம் செய்து அழைக்கிறது. ஆனால்
    கொலஸ்ட்ரால் கொப்புளமாய் கொதிக்கிறதே தோபத்தில்!
    சகோ! கோபிக்க வேண்டாம்! இது எனக்கு மட்டும்!
    குழந்தைகளுக்கு செய்து தர சொல்லி உள்ளேன்.
    அடுத்த இலைக்கு பாயாசம் கேட்கிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்.
    நன்றி சகோ!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  7. குழலின்னிசையின்"
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  8. புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் வருகையை பதிவு செய்ய :

    http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...