Thursday, August 20, 2015

மசால் கடலை / Masala Kadalai / Masala Peanuts


தேவையான பொருள்கள் -
  1. பச்சை நிலக்கடலை - 200 கிராம் 
  2. கடலை மாவு - 50 கிராம் 
  3. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு 
  5. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நிலக்கடலை, கடலைமாவு, மிளகாய் தூள், உப்பு கலந்து உள்ளங்கையில் சிறிது தண்ணீர் விட்டு மாவுடன் கடலை சேரும் படி நன்றாக பிசிறிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசிறி வைத்துள்ள கடலையை கடாய் கொள்ளும் அளவுக்கு போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்.
  3. மீதமுள்ள கடலை கலவையையும் இதே முறையில் பொரித்து எடுத்து ஒரு டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.
  4. எண்ணெய் உறிஞ்சியவுடன் ஒரு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். சுவையான மசால் கடலை ரெடி.

26 comments:

  1. ஆகா.. அருமை..

    சத்து நிறைந்தது - நிலக்கடலை!..
    எளிய செய்முறைக் குறிப்பு.. அபாரம்!..

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்துக்கு நன்றி சார்.

      Delete
  2. உடம்புக்கு நல்லது. நொறுக்குத் தீனி என்ற நிலையிலும் நல்லது. நன்றி.

    ReplyDelete
  3. மாலை நேரத்து மகா சக்தியை....
    "மசாலா கடலையை" தந்த தங்களது சமையல் யுத்திக்கு
    தலை வணங்குகிறோம் சகோ!
    "நொறுக்குத் தீணி" இனிமை!
    நன்றி சகோ!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. கவிதை வடிவில் கருத்து சொன்ன சகோவுக்கு நன்றி.

      Delete
  4. ஆஹா.... மசாலாக்கடலை எனக்கு பிடித்தமானது.

    ReplyDelete
  5. கொறிப்பதற்கு அருமையானது!நன்றி

    ReplyDelete
  6. எளிமையான சுவையான உணவு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். தொடர்ந்து கருத்திட வாருங்கள்.

      Delete
  7. மசால்கடலை சூப்பராவும் ,புதிதாவும் இருக்கு. சுவையான குறிப்பு. நன்றி.

    ReplyDelete
  8. பிரியசகியின் வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  9. வணக்கம்மா,
    எனக்கு ஏன் இங்கு எல்லோருக்கும் பிடிக்கும்.இனி செய்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்து எனக்கும் பார்சல் அனுப்புங்கள் மகேஸ்வரி.

      Delete
  10. வணக்கம் சகோதரி.

    படங்களுடன், மசால் கடலை செய்முறை விளக்கங்கள் அருமையாக உள்ளது. பார்க்கும் போதே சாப்பிடும் ஆவலைத் தூண்டுகிறது. கண்டிப்பாக தங்கள் பக்குவபடி ஒருநாள் செய்து விடுகிறேன் சகோதரி.
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies

    1. கண்டிப்பாக செய்து பாருங்கள் சகோ. வருகைக்கு நன்றி.

      Delete
  11. செய்வதற்கு இலகுவாக இருக்கும் போல் தோன்றுகிறது. செய்து பார்க்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி தோழி! :)

    ReplyDelete
  12. Super madam.. Really all recipes instructions are fine

    ReplyDelete
  13. Yelimaiyana recipe .yellorum kavarakudiya snaks. Superma.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...