தேவையான பொருட்கள் -
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- கேரட் - 1
- பச்சை பட்டாணி - 50 கிராம்
- காலிபிளவர் - 100 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
- கொத்தமல்லி பொடி - 1 மேஜைக்கரண்டி
- சீரக தூள் - 1 மேஜைக்கரண்டி
- மிளகாய் பொடி - 1 மேஜைக்கரண்டி
- மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா பொடி - 1 மேஜைக்கரண்டி
- எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
அரைக்க -
- தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
- சோம்பு - 1 மேஜைக்கரண்டி
- முந்திரி பருப்பு - 6
- வெங்காயம், தக்காளி, கேரட், காலிபிளவர் எல்லாவற்றையும் பொடிதாக வெட்டி வைக்கவும்.
- அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கிளறவும். அதனுடன் உப்பு, மிளகாய் பொடி, மல்லிப்பொடி, சீரகப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து கிளறவும்.
- பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- காய்கறிகள் நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் கரம் மசாலா சேர்க்கவும். தேவைபட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- எல்லாம் நன்கு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான வெஜ் குருமா ரெடி. சப்பாத்தி, பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
இன்றே செய்வதாக வீட்டில் சொன்னார்கள்... நன்றி...
ReplyDeleteசெய்து சாப்பிட்டாச்சா எப்படி இருந்தது ? வருகைக்கு நன்றி சார்.
Deleteஇது எளிய செய்முறை.. அருமை..
ReplyDeleteநானும் (கிட்டத்தட்ட) இதே மாதிரி தன் செய்வேன்!..
நீங்களும் இதே முறையில் செய்வது அறிந்து மகிழ்ச்சி.
Deleteவணக்கம்
ReplyDeleteசெய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமையாக உள்ளது நிச்சயம் செய்து சாப்பிடுகிறோம்.. பகிர்வுக்கு நன்றி
நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நிச்சயம் செய்து சாப்பிடுங்கள் ரூபன்.
Deletekuruma arumai saratha amma...
ReplyDeleteThank you Shamee.
Deleteசூப்பர்ம்மா, நானும் செய்வேன், எளிய செயல்முறை விளக்கம்,
ReplyDeleteநன்றி.
நன்றி மகேஸ்வரி.
Deleteஅருமை சகோ
ReplyDeleteநன்றி சகோ.
DeleteSUPER
ReplyDeletenantri sako.
Deleteகுருமா ருசித்தேன். அருமை.
ReplyDeleteகுருமா ருசித்தமைக்கு நன்றி சார்.
Deleteஅட எவ்வளவு எளிதான முறை நன்றி !
ReplyDeletenantri sako.
Deleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteஅருமையான வெஜிடபிள் குருமா செய்முறையை அழகான படங்களுடன் பகிர்ந்து விட்டீர்கள். பார்க்கும் போதே நல்ல மணத்துடன் சாப்பிட தூண்டுகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி.
பல பதிவுகள் என் படிக்க இயலாத சூழலில் தவற விட்டு விட்டேன். இனிப் படித்து கருத்திடுகிறேன். என் தளம் வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வாங்க சகோ நீங்கள் பிஸியாக இருந்தாலும் எனது வலைப்பூவுக்கு வந்து சொன்ன கருத்துக்கு நன்றி.
Deleteசூப்பர் அம்மா...
ReplyDeleteSuper amma
ReplyDeleteThank you Divya jothibass.
Delete