தேவையான பொருள்கள் -
- வறுத்த வெங்காய வடகம் - 6
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- புளி - நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- மிளகாய் வத்தல் - 3
- கொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி
- சீரகம் - 1 மேஜைக்கரண்டி
- மிளகு - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
- வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 4
- கறிவேப்பிலை - சிறிது
- தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி
- புளியை 100 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு எல்லாவற்றையும் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்கு வறுத்து அடுப்பை அணைக்கவும். அதனுடன் சீரகம், கறிவேப்பிலை இரண்டையும் சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆற விடவும்.
- நன்கு ஆறியதும் மிக்ஸ்சியில் பொடி பண்ணிக் கொள்ளவும். தேங்காய் துருவலை தனியாக மிக்ஸ்சியில் அரைத்து எடுத்து வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயத்தை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் வெந்தயம், புளித்தண்ணீர், மஞ்சள் பொடி, உப்பு, திரித்து வைத்துள்ள பொடி மேலும் ஒரு கப் (200 மில்லி) தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும். வடகத்தில் உப்பு இருப்பதால் தேவைக்கு ஏற்ற படி சேர்த்துக் கொள்ளவும்.
- மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- இறுதியில் வறுத்த வெங்காய வடகத்தை சேர்த்து அடுப்பை அணைக்கவும். பிறகு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான வெங்காய வடக குழம்பு ரெடி.
சுவையான வெங்காய வடக குழம்பு செய்முறைக்கு நன்றி...
ReplyDeleteகருத்துக்கு நன்றி சார்.
Deleteருசித்தேன், நன்றி.
ReplyDeleteகருத்துக்கு நன்றி சார்.
Deleteமணம்.. குணம்..
ReplyDeleteவடகக் குழம்பிற்கு நிகர் - வடகக் குழம்பே தான்!..
கருத்துக்கு நன்றி சார்.
Deleteஆஹா...வடகக்குழம்பின் சுவையே தனி தான் சகோ...
ReplyDeleteஎன்பக்கம் தலைவியின் காதல்
கருத்துக்கு நன்றி சகோ. உங்கள் பக்கம் வந்து கருத்து சொல்லி விட்டேன்.
Deleteவடகக்குழம்பு மிக நன்றாக இருக்கிறது. புளி மட்டும் எலுமிச்சம்பழ அளவு அல்லது நெல்லி அளவு என்று குறிப்பிட்டால் விரும்புகிறவர்களுக்கு செய்து பார்க்க வசதியாக இருக்கும்!
ReplyDeleteகருத்துக்கு நன்றி மனோ அக்கா.
DeleteAahaaaaa
ReplyDeleteAahaaaaa
ReplyDeleteAaha கருத்துக்கு நன்றி சகோ.
Deleteவடகம் குழம்பு செய்முறை அருமை அம்மா...
ReplyDeleteகருத்துக்கு நன்றி குமார்.
ReplyDeleteஅருமையாக இருக்கிறதே ம்..ம் செய்து பார்க்கவேண்டும். நன்றி சகோ நன்றி !
ReplyDeleteசெய்து பாருங்கள் சகோ.
Deleteவணக்கம்
ReplyDeleteஎல்லாமே சூப்பரா சொல்றீங்கம்மா,,,,,,
எளிய செயல் முறை விளக்கம்,
செய்து பார்த்து சொல்கிறேன், சாப்பிட வாங்கம்மா
நன்றி.
வடகம் குழம்பை ரெடி பண்ணுங்கள். நான் கண்டிப்பாக சாப்பிட வருகிறேன் மகேஸ்வரி.
ReplyDeleteஆகா!சாப்பிடனும்னு தோணுதே!
ReplyDeleteகருத்துக்கு நன்றி சார். எடுத்து சாப்பிட்டிருக்கலாமே !
ReplyDeleteநன்றாக உள்ளாது சாரதாம்மா. வெங்காயவடக குழம்பு இதுவரை கேள்விபட்டதே இல்லை.செய்து பார்க்கிறேன்.இந்த பொடி தான் நான் பூண்டு குழம்பிற்கு பயன்படுத்துவேன்.
ReplyDeleteநீங்கள் சொன்ன மாதிரி இந்த பொடியில் பூண்டு குழம்பும் வைக்கலாம். வருகைக்கு நன்றி ஷமீ.
ReplyDeleteSuper ma
ReplyDeleteThank you mohana.
Delete