தேவையான பொருள்கள் -
- முட்டை - 3
- துருவிய சீஸ் - 2 மேஜைக்கரண்டி
- மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
- குட மிளகாய் - 2 மேஜைக்கரண்டி
- தக்காளி - 2 மேஜைக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 2 மேஜைக்கரண்டி
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை -
- மூன்று முட்டைகளையும் உடைத்து ஒரு பௌலில் ஊற்றி அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு நுரைவரும்படி கலக்கி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், குட மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- பாதி வதங்கியதும் அதன் மேல் கலக்கி வைத்துள்ள முட்டையை ஊற்றவும்.
- அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். இந்த ஆம்லெட்டை திருப்பி போட்டு வேக வைக்க போவதில்லை. அதனால் மூடி போட்டு வேக விடவும்.
- நடுவில் வேகாமல் இருந்தால் கடாயை எடுத்து ஒரு சுற்று சுற்றவும். இப்படி செய்வதால் நடுவில் வேகாமல் இருக்கும் முட்டை கடாயில் ஓரமாக வந்து சீக்கிரமாக வெந்து விடும்.
- கடைசியாக சீஸை சுற்றி போடவும். ஒரு நிமிடம் கழித்து சீஸ் உருகியதும் அடுப்பை அணைக்கவும்.
- பிறகு பாதியாக மடித்து எடுத்து தட்டில் வைக்கவும். சுவையான முட்டை ஆம்லெட் ரெடி. கட் செய்து பரிமாறவும். பிரெட்டுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
அருமை... வித்தியாசமாக...
ReplyDeleteஉடன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
Deleteசூப்பர்ம்மா,,,,,,
ReplyDeleteஏன் திருப்பி போடக் கூடாது,
நன்றி.
திருப்பிப் போடக்கூடாது.. ன்னா - போடக்கூடாது தான்!..
DeleteChease மற்றும் Capsicum Slices இவற்றை, முட்டையின் மேலே சிந்தாமல் சிதறாமல் தூவுவது - Seasoning எனப்படும். அது ஒரு அழகு..
அழகு கலைந்திடக்கூடாது என்பதற்காகத் தான்!..
மகேஸ்வரி இந்த ஆம்லெட்க்கு இது தான் செய்முறை .
Deleteஅப்படி யெல்லாம் கண்மூடித் தனமா ஏற்றுக்கொள்ள மடியாதும்மா,,,,,,,,,,,
Deleteசூம்மா, நீங்க என்ன சொன்னாலும் சரி செய்து பார்த்துக் கொள்வேன்,
நடுவுல வந்து கொஞ்சம் பக்கத்தை நிரப்பியதற்கு நன்றிகள் சார்.
Aahaaaaa
ReplyDeleteThank you sako.
Deleteஓ திருப்பி போடக் கூடாதா நன்றி நன்றி! அருமை !
ReplyDeleteஆமா சகோ கண்டிப்பாக திருப்பி போட கூடாது. இந்த ஆம்லெட்டுக்கு இந்த செய்முறை தான் சரியானது.
Deleteakka...sema super ..parkave sapidanum pola irukku
ReplyDeleteEduthu sappittu irukkalamay sangeetha.
ReplyDeleteவித்தியாசமாக இருக்கிறது அம்மா....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்.
ReplyDeleteஆம்லெட் வேண்டும் என்று அடம்பிடிக்கத் தோன்றுகிறது சகோதரி!
ReplyDeleteநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் சகோ.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇலகுவான செய்முறை விளக்கம் மதியம் செய்து சாப்பிடுகிறேன்... நிச்சயம்.. பகிர்வுக்கு நன்றி
நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-