Wednesday, July 8, 2015

கேரட் ஜூஸ் / Carrot Juice


பரிமாறும் அளவு - 2

தேவையான பொருட்கள் -
  1. கேரட் - 4
  2. லெமன் - 1/2
  3. சர்க்கரை - தேவைக்கேற்ப   
செய்முறை -
  1. கேரட்டை தோல் சீவி சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
  2. மிக்சியில் நறுக்கிய கேரட் மற்றும் 3/4 கப் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி அரைக்கவும். அதை வடிகட்டி கொள்ளவும். மறுபடி ஒரு 1/2 கப் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டவும்.
  3. வடிகட்டிய ஜூஸில் லெமனை பிழியவும். தேவைக்கு ஏற்றபடி சர்க்கரை சேர்த்து  நன்றாக கலக்கவும்.
  4. கேரட் ஜூஸ் ரெடி. கிளாசில் ஊற்றி பரிமாறவும்.

22 comments:

  1. படத்தைப் பார்த்தாலே சும்மா ஜிவ்...!

    நாங்களும் செய்து பார்க்கிறோம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சார். கண்டிப்பாக செய்து அருந்துங்கள்.

      Delete
  2. ஜில்லுன்னு இழுக்குதே குடிக்க.....

    ReplyDelete
    Replies
    1. குடித்திருகக்கலாமே சகோ.

      Delete
  3. வணக்கம்மா,
    நான் செய்வேன், ஆனால் எலுமிச்சைச் சாறு சேர்த்தது இல்லை, சேர்த்து செய்துபார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்து ருசியுங்கள்.

      Delete
  4. குடிக்க விருப்பம் தோணுதே!

    ReplyDelete
    Replies
    1. எடுத்து குடித்திருகக்கலாமே சார். வருகைக்கு நன்றி.

      Delete
  5. "கேரட் ஜூஸ்" கேட்காமலேயே அழைத்து வந்து, அருக தந்தமைக்கு அன்பின் நன்றி சகோ!
    ஆரோக்கிய அரும் பானம்! அருமை!
    சகோதரி வலைச்சரத்தில் இன்றையை பின்னூட்டத்தில் தங்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன் வாருங்கள்! வந்து காணுங்கள்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரத்தில் இன்றைய பின்னூட்டத்தில் என்னைப்பற்றி குறிப்பிட்டு சொன்னதற்கு மிக்க நன்றி சகோ. நானும் வலைச்சரம் வந்து பார்த்து உங்களுக்கு நன்றியும் சொல்லிவிட்டேன்.

      Delete
  6. கேரட் சாறு!...

    அதைப் பார்க்கவே பரவசம் ஆகும்..
    பொதுவாக ஆரோக்கியம் மிக்கது என்றாலும் குறிப்பாக கண்களுக்கு நல்லது என்கின்றார்கள்..

    இங்கே - juicer உள்ளது . கேரட்களை நன்கு கழுவியபின் இயந்திரத்தில் இட்டு - நேரடியாக சாறு பிழிந்து விடலாம்.. சாறும் சக்கையும் தனியாக பிரிந்து விடும்.

    ஜீனியும் (sugar) சேர்ப்பதில்லை.. எலுமிச்சம்பழமும் பிழிவதில்லை..

    கேரட்டின் இயற்கையான இனிப்பே - அலாதியானது!..

    ReplyDelete
  7. உங்கள் வருகைக்கும் குறிப்புக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  8. அருமையாக உள்ளது.மகள் குறிப்பு போல் தெரிகிறது.எலுமிச்சை சாறு சேர்ப்பது புதிது எனக்கு :)

    ReplyDelete
  9. ஆம் ஷமீ எனது மகள் குறிப்பு தான். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. படமே ஜூஸ் உடனே குடிக்கச் சொல்லுது அம்மா.

    ReplyDelete
  11. உடனே எடுத்து குடித்திருக்கலாமே குமார்.

    ReplyDelete
  12. கடைக்குச் சென்று காசு கொடுத்துக் குடிக்காமல் நாமே செய்து சுவைக்க உதவும் ருசியான பதிவு!

    ReplyDelete
  13. அழைத்து, பருக வைத்தமைக்கு நன்றி. அருமை.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...