![]() |
தேவையான பொருட்கள் -
- பரோட்டா - 6
- முட்டை - 3
- சால்னா - 1 கப்
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- மிளகாய் - 2
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி பொடி - 1 மேஜைக்கரண்டி
- மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
- மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- கொத்தமல்லி தழை - சிறிது
செய்முறை -
- பரோட்டாக்களை பிய்த்து வைக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் மிளகாய் பொடி, கொத்தமல்லி பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
- பிறகு அதனுடன் பிய்த்து வைத்துள்ள பரோட்டா துண்டுகளை சேர்த்து கிளறவும்.
- பிறகு அதன் மேல் சால்னாவை ஊற்றி எல்லா இடங்களிலும் படும் படி நன்கு கிளறவும்.
- பிறகு அதன் மேல் முட்டைகளை உடைத்து ஊற்றி 5 - 10 நிமிடம் வரை நன்கு கிளறி கொத்தி விடவும்.
- இறுதியில் மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை தூவி நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான கொத்து பரோட்டா ரெடி.
- சால்னாக்கு பதிலாக முட்டை குருமா அல்லது சிக்கன் குழம்பு அல்லது வெஜ் குருமா போன்றவற்றை உபயோகபடுத்தலாம்.