பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தேவையான பொருள்கள் -
- நாட்டுக்கோழி - 1/2 கிலோ
- தக்காளி - 2
- பச்சை மிளகாய் - 2
- தயிர் - 2 மேஜைக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
- மல்லித்தழை - சிறிது
- கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- மிளகாய் வத்தல் -5
- கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி
- சீரகம் - 1 மேஜைக்கரண்டி
- மிளகு - 1 மேஜைக்கரண்டி
- எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- பட்டை - 1 இன்ச் அளவு
- கிராம்பு - 2
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- முதலில் கோழி துண்டுகளை நன்கு சுத்தப்படுத்தி வைக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக வெட்டி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, சீரகம், மிளகு எல்லாவற்றையும் போட்டு கிளறி அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.
- தேங்காயையும் நன்கு வறுத்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பில்லை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் தயிர், திரித்து வைத்துள்ள பொடி, கரம் மசாலா தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் உப்பும் கோழித்துண்டுகளையும் சேர்த்து மசாலா எல்லா இடங்களிலும் படும் படி நன்கு கிளறி விடவும்.
- பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
- மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- குழம்பு கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான நாட்டுக்கோழி குழம்பு ரெடி.
No comments:
Post a Comment