தேவையான பொருள்கள் -
- கடலைப்பருப்பு - 200 கிராம்
- இட்லி அரிசி - 50 கிராம்
- நிலக்கடலை - 3 மேஜைக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
- காயத்தூள் - சிறிது
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
- முதலில் கடலைப்பருப்பு, அரிசி இரண்டையும் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறிய பின் பருப்பு, அரிசியுடன் மிளகாய் தூள், காயத்தூள், உப்பு சேர்த்து கிரைண்டரில் இட்லி மாவு பதத்தை விட கொஞ்சம் தளர்வாக அரைத்துக் கொள்ளவும். 5 நிமிடங்களில் அரைபட்டு விடும்.
- நிலக்கடலையை வறுத்து தோலுரித்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் எண்ணெயின் மேல் ஒரு பெரிய கண் கரண்டியை வைத்து ஒரு மேஜைக்கரண்டி மாவு எடுத்து அதில் ஊற்றி வேகமாக தேய்த்து கடாய் கொள்ளும் அளவுக்கு போட்டு மிதமான சூட்டில் வைத்து வேக விடவும்.
- பூந்தி நன்கு சிவந்ததும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் போட்டு வெந்தவுடன் எடுத்து டிஸ்யு பேப்பரில் பரப்பி ஆற விடவும்.
- சூடாக இருக்கும் எண்ணையில் கறிவேப்பிலையை வறுத்து காரப்பூந்தியுடன் சேர்க்கவும். பிறகு வறுத்து வைத்துள்ள நிலக்கடலையும் சேர்த்து கலந்து விடவும்.
- எண்ணெய் நன்கு உறிஞ்சியவுடன் காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். சுவையான காராப் பூந்தி ரெடி.
No comments:
Post a Comment