முப்பிடாதி அம்மன் கோவில் பாளையங்கோட்டையில் உள்ள கோட்டூர் சாலையில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. எனவே கோவிலை புதுப்பிக்க நினைத்து இரண்டு ஆண்டுகளாக வேலை நடந்து வந்தது. பக்தர்கள் அணைவரும் கொடுத்த நன்கொடையால் கோவில் புதுப்பிக்கும் பணிகளும் கோபுர வேலைப்பாடும் நல்லபடியாக முடிந்து 10.9.2014 அன்று முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
முப்பிடாதி அம்மன் கோவிலின் தோற்றம்
6.9.2014 முதல் 9.9.2014 வரையாக வழிபாடு நடத்துவதற்க்கு ஏற்பாடுகள் செயப்பட்டிருந்தது. பிறகு யாக வழிபாடு நல்ல முறையில் நடந்ததது.
கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் முப்பிடாதி அம்மனின் மூத்த சகோதரியான பேராச்சி அம்மனின் பாதத்தில் தண்ணீர் குடத்தை வைத்து வழிபட்டு வந்த தண்ணீரால் முப்பிடாதி அம்மனை நீராட்டினார்கள். பொது மக்கள் அணைவரும் வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து பிள்ளையாரை நீராட்டினார்கள். அன்று மாலையில் யானை ஊர்வலம் வீதி முழுவதும் உலா வந்தது.
கும்பாபிஷேகம் அன்று காலை 5 மணிக்கு மங்கள இசை நடந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
காலை 6 மணிக்கு 4ம் கால யாக பூஜைகள் ஆரம்பமானது. 7 மணிக்கு அஸ்தர ஹோமம் நடந்தது. 9 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பம் எழுந்தருளல், விமான கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. 12 மணிக்கு மேல் கோவிலில் 15000 பேருக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு அம்பாள் சப்பரம் வீதி உலா வந்தது.
இப்படியாக பாளை முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இனிதே நடந்து முடிந்தது.
முப்பிடாதி அம்மன் கோவில் எனது அம்மா வீட்டிற்கு அருகில் உள்ளது. நான் கும்பாபிஷேகத்திக்கு முந்தைய நாளே சென்று விட்டேன். அன்று வெளியூரிலிருக்கும் என்னுடைய பழைய தோழிகள் நிறைய பேர் வந்திருந்தார்கள். அன்று எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மிகவும் சந்தோஷமாக இருந்தோம். எங்கள் எல்லோருக்கும் அம்மனின் அருளும் கிடைத்தது.
நன்றி
சாரதா
Thanks for sharing this info,loved the elephant
ReplyDeletenice pictures.
ReplyDelete