Tuesday, October 28, 2014

வாழ்க்கையின் சின்னசின்ன சந்தோஷங்கள்

                           

இன்றைய காலகட்ட நெருக்கடியான வாழ்க்கையிலும் சின்னசின்ன சந்தோஷங்கள் வாழ்க்கைக்கு சுவை சேர்க்கிறது. என்னை மகிழ்ச்சிப்படுத்தும் சின்னசின்ன சந்தோஷமான விஷயங்களை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் நீ உன் சமையல் அறையை நல்ல சுத்தமாக வைத்திருக்கிறாய் என்று பாராட்டும் போது என் உழைப்புக்கான மகிழ்ச்சி!

இட்லி அல்லது வடைக்கு மாவு அரைத்து எடுத்து கிரைண்டரை சுத்தப்படுத்திய பிறகு கரண்ட் கட் ஆகும் போது மாவு அரைத்து முடித்த சந்தோஷத்தில் ஏற்படும் ஒரு சின்ன மகிழ்ச்சி!

பண்டிகை நாட்களில் வீட்டை அலங்கரித்து முடிக்கையில் தோன்றும் பெருமித மகிழ்ச்சி!

மார்கெட் சென்று தேவையான காய்கறிகளை வாங்கி முடித்து வெளியில் வந்தவுடன் சாலை ஓரத்தில் இருக்கும் கரும்புச்சாறு வாங்கி பருகும் போது  உடலும், உள்ளமும் பெற்றிடும் மகிழ்ச்சி!

விருந்தினர்கள் வரும் போது பதற்றத்துடன் செய்த குழம்பு வகைகள், கூட்டு வகைகள் எல்லாம் நல்ல ருசியாக அமைந்து விடுவது எல்லையில்லா மகிழ்ச்சி!

வேலை முடிந்து களைப்பாக இருக்கும் போது மகள் டீ தயாரித்து தரும் போது அளவில்லா மகிழ்ச்சி! (சுவையுடன் பாசமும் அதிகமாக இருக்கும்)

நமக்கு நாமே பிளவுஸ் தைத்து முடித்தவுடன் கரெக்ட் ஆக இருக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி!

டி. வி யில் பழைய பாடல்கள் கேட்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி!

என்னுடைய பேரன் வீடியோ சாட்டில் வந்து என்னுடன் பேசும் போதும் சாரதா ஆச்சி என்று எழுதி காண்பித்ததை நினைத்து அளவில்லா மகிழ்ச்சி!

என்னுடைய பேத்தி என்னுடன் விளையாடியதும் என்னை ஆச்சி என்று அழைத்து மழலையில் பேசியதையும் நினைத்து அளவில்லா மகிழ்ச்சி!

இப்படியாக நாம் வாழ்க்கையில் கிடைக்கின்ற சின்னசின்ன சந்தோஷங்களை நினைத்து நம்முடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ பழகிக் கொள்ளவேண்டும்.

நன்றி
சாரதா

7 comments:

  1. ரொம்ப உணர்ந்து எழுதி இருக்கீங்க ... மிகவும் ரசித்தேன் ...

    ReplyDelete
  2. சங்கீதா முதன் முதலாக எனது வலைப்பூவுக்கு வருகை தந்து கருத்து சொன்னதற்கு நன்றி .

    ReplyDelete
  3. வணக்கம் தோழி
    படிக்க படிக்க ...மகிழ்ந்தேன். பெண்கள் எவ்வளவு அழகாய் தங்களின் உழைப்பில் மகிழ்கிறோம்..இல்லையா..? இதே ஒத்த அலைவரிசையின்...ரசனையை நினைத்து வியக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  4. தோழி உமையாள் காயத்திரியின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...