Tuesday, April 28, 2015

ஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar

இந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலாம். எனவே நீங்களும் நான் கொடுத்துள்ள குறிப்பின்படி செய்து அசத்துங்க !!

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. துவரம்பருப்பு - 25 கிராம் 
  2. பாசிப்பருப்பு - 25 கிராம் 
  3. கடலைப்பருப்பு - 25 கிராம் 
  4. தக்காளி - 1
  5. பச்சை மிளகாய் - 1
  6. சின்ன வெங்காயம் - 4
  7. ஆச்சி சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  8. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  9. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  10. மல்லித்தழை - சிறிது 
  11. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. சின்ன வெங்காயம் - 4
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் போட்டு நன்கு வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  2. ஆறிய பிறகு மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.
  3. திரித்து வைத்துள்ள பொடியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  4. தக்காளியை பொடிதாகவும், வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கிலும் வெட்டி வைக்கவும்.
  5. அடுப்பில் அதே கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முழு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  6. தக்காளி நன்கு வதங்கியதும் அதனுடன் ஆச்சி சாம்பார் பொடி, மஞ்சள் தூள், காயத்தூள் சேர்த்து கிளறவும். பிறகு உப்பு, 300 மில்லி தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  7. பிறகு கலக்கி வைத்துள்ள பொடியை சேர்த்து மல்லித்தழையும் சேர்த்து அடுப்பை அணைக்கவும். பொடியை சேர்த்து கொதிக்க வைக்க கூடாது. பிறகு சாம்பாரை பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
  8. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  9. வெங்காயம் பொன்னிறமானதும் எடுத்து குழம்பில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான இட்லி சாம்பார் ரெடி.
குறிப்புகள் -
  1. மூன்று வகையான பருப்புகளை சம அளவு எடுத்து வறுத்து மிக்ஸ்சியில் திரித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது உபயோகபடுத்தலாம்.

Friday, April 24, 2015

சீனி அவரைக்காய் / கொத்தவரங்காய் பொரியல் / Cluster Beans Poriyal


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சீனி அவரைக்காய் - 100 கிராம் 
  2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  3. உப்பு - தேவையான அளவு     
  4. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி                     
கரகரப்பாக அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 2
  2. சீரகம் - 1 தேக்கரண்டி   
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி  
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. சீனி அவரைக்காய், வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
                                                                               
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில்  சீனி அவரைக்காய் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
                                                                
  3. நன்கு வெந்தவுடன் அதிலுள்ள தண்ணீரை வடித்து விடவும்.   
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு  போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
                                                                                
  5. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் கரகரப்பாக அரைத்து வைத்துள்ள  மிளகாய் வத்தல், சீரக கலவையை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
                                                                              
  6. பிறகு அதனுடன் அவித்து வைத்துள்ள சீனி அவரைக்காய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். 
  7. இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். பிறகு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான சீனி அவரைக்காய் பொரியல் ரெடி.                          

Monday, April 20, 2015

வெங்காய காரச்சட்னி / Onion kara Chutney


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பெரிய வெங்காயம் - 2 
  2. தக்காளி - 1
  3. மிளகாய் வத்தல் - 4
  4. மல்லித்தழை - சிறிது 
  5. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு                              
செய்முறை -
  1. வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும் .
                                                                     
  2. அடுப்பில் கடாயை வைத்து 1 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தலை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.
  3. அதே கடாயில் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
                                                                     
  4. வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி சிறிது நேரம் ஆற விடவும்.                                                                     
  5. ஆறிய பிறகு அதனுடன் வறுத்த மிளகாய் வத்தல், மல்லித்தழை, உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.                                                                                               
  6. சுவையான வெங்காய காரச்சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Thursday, April 16, 2015

பீர்க்கங்காய் பச்சடி / Peerkangkai Pachadi


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பீர்க்கங்காய் - 150 கிராம் 
  2. புளி - சிறிது 
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு                                                                            
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 25 கிராம் 
  2. பச்சை மிளகாய் - 1
  3. சின்ன வெங்காயம் - 10
  4. சீரகம் - 1 தேக்கரண்டி 
                                                      
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி நறுக்கி 
  4. சின்ன வெங்காயம் - 4
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. பீர்க்கங்காயின் தோலை சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்.
                                                                         
  2. புளியை 100 மில்லி தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
  3. தேங்காய் துருவல், பச்சை மிளகாய்,  சின்ன வெங்காயம், சீரகம் எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
                                                                       
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து கிளறவும். உப்பு சேர்க்கவும். பீர்க்கங்காயில் நீர் சத்து இருப்பதால் தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.
                                                                
  6. பீர்க்கங்காய் வெந்தவுடன் புளித் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.      
  7. பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும்.  
  8. பச்சடி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான பீர்க்கங்காய் பச்சடி ரெடி.

Wednesday, April 8, 2015

சிறுகிழங்கு பொரியல் / Sirukilangu Poriyal


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சிறுகிழங்கு - 300 கிராம் 
  2. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  3. காஷ்மீரி மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு                                          
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. குக்கரில் சிறுகிழங்கு மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.                               
  2. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
  3. ஆறிய பிறகு தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.       
                                                                          
  4. பிறகு அதன் மேல் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
                                                            
  5. வெங்காயத்தை பொடிதாக வெட்டி வைக்கவும்.
                                                                          
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
                                                                            
  7. வெங்காயம் பொன்னிறமானதும் கலந்து வைத்துள்ள சிறுகிழங்கு துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.
                                                                            
  8. இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.         
                                                                                     
  9. பிறகு வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான சிறுகிழங்கு பொரியல் ரெடி.

Friday, April 3, 2015

காலிபிளவர் ப்ரை / Cauliflower fry

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. காலிபிளவர் - 1
  2. மைதா மாவு - 50 கிராம் 
  3. கார்ன் ப்ளோர் - 25 கிராம் 
  4. அரிசி மாவு - 1 தேக்கரண்டி 
  5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  6. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  7. சிவப்பு புட் கலர் - சிறிது 
  8. உப்பு - தேவையான அளவு 
  9. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. காலிபிளவரை நன்றாக கழுவி பூவாக பிரித்தெடுத்துக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்தவுடன் அதில் காலிபிளவரை போட்டு அடுப்பை அணைத்து மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து விடவும். 
                                                                                      
  2. மைதா மாவு, கார்ன் ப்ளோர், அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு புட் கலர், மிளகாய் தூள், உப்பு  எல்லாவற்றையும் கலந்து அதனுடன் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்து அதில் காலிபிளவரை போட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.
                                                         
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு காலிபிளவர் துண்டுகளை போடவும்.
  4. இரு புறமும் திருப்பி விட்டு காலி பிளவர் வேகும் வரை பொரித்து எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.                                                                                                        
  5. மீதமுள்ள எல்லா காலிபிளவர் துண்டுகளையும் இதே முறையில் பொரித்து ஒரு  டிஸ்யு பேப்பரில் வைக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான காலி பிளவர் ப்ரை ரெடி.                                                                  
Related Posts Plugin for WordPress, Blogger...