Monday, November 2, 2015

சீனி அவரைக்காய் கூட்டு / Cluster Beans Curry

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சீனி அவரைக்காய் - 100 கிராம் 
  2. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. புளி - நெல்லிக்காய் அளவு 
  5. உப்பு - தேவையான அளவு
அரைக்க -
  1. தேங்காய் - 4 மேஜைக்கரண்டி 
  2. சின்ன வெங்காயம் - 5
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. பெரிய வெங்காயம் - 1/2 
  4. காயத்தூள் - சிறிது 
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. சீனி அவரைக்காய், வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சீனி அவரைக்காய் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதோடு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  3. கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் 15 நிமிடம் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
  4. வெந்த பிறகு அதிலுள்ள தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.
  5. புளியை ஊற வைத்து 150 மில்லி தண்ணீர் அளவுக்கு கரைத்து வைக்கவும்.
  6. தேங்காய், வெங்காயம் இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  8. வெங்காயம் பொன்னிறமானதும் அவித்து வைத்துள்ள சீனி அவரைக்காயை சேர்த்து கிளறி அதோடு புளித்தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
  9. மசாலா வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  10. மசாலா கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான சீனி அவரைக்காய் கூட்டு ரெடி.

23 comments:

  1. அடடா புகைப்படம் பளீர் அருமை சகோ....

    ReplyDelete
    Replies
    1. அண்ணா நான் தான் பர்ஸ்டுனு கமெண்ட் லா போட்டேன்.. எனக்கு முன்னாடியே ஓடி வந்தாச்சா??

      Delete
  2. ஹை !! நான் தான் பர்ஸ்டு.. இந்த காய் பொரிச்சா கசக்கும்னு பண்ணதே இல்லைமா.. இந்த முறையில ட்ரை பண்றேன். தேங்க்ஸ்மா

    ReplyDelete
  3. கண்டிப்பாக செய்து பாரு அபி.

    ReplyDelete
  4. தங்களின் தகவலுக்கு மட்டும் : http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/World-Tamil-Bloggers-Guide-Book.html

    ReplyDelete
  5. நாளைக்கு செய்து பார்க்க வேண்டும் அம்மா! படங்கள் அருமையான உள்ளது! காயத்துள் என்பது என்ன??

    ReplyDelete
    Replies
    1. காயத்தூள் என்பது பெருங்கயத்தூள் ஆகும். வருகைக்கு நன்றி பூபகீதன்.

      Delete
  6. வணக்கம்

    செய்முறை விளக்கத்துடன் அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. எனக்கு கொத்தவரங்காய் ரொம்பப் பிடிக்கும்...
    செய்து பார்க்க வேண்டும் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்.

      Delete
  8. உங்க குறிப்பின்படி செய்துபார்க்கனும் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் பிரியசகி.

      Delete
  9. ரொம்ப நல்லா இருக்கு சாரதா அம்மா.புளி சேர்த்து கூட்டு வச்சதில்லை இதுவரை..அடுத்த தடவை செய்யும் போது உங்க முறைப்படி செய்றேன்.

    ReplyDelete
  10. தேங்காய் பர்பி குறிப்பு இருந்தால் குடுங்க எனக்காக...
    சிறு வயதில் சாப்பிட்டது..திடீரென்று எனக்கும் என்னவருக்கும் சாப்பிட ஆசை வந்துடுச்சு அதான் கேட்டேன்.

    ReplyDelete
  11. தேங்காய் பர்பி குறிப்பு கண்டிப்பாக உங்களுக்காக கொடுக்கிறேன் ஷமீ.

    ReplyDelete
  12. அருமையான கூட்டு!எனக்கு பிடித்ததும் கூட! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  14. பார்த்து ரசிக்கலாம்!காசியில் போயிடுச்சு!

    ReplyDelete
  15. உங்கள் சமையல் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு ..ம்ம் செய்முறைகள் எல்லாம் அழகைத்தான் இருக்கு செய்து பார்க்கத்தான் நேரம் இல்லையே
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீராளன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...