Tuesday, June 21, 2016

ராஜ்மா மசாலா / Rajma Masala


பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. ராஜ்மா - 1 கப் ( 200 கிராம் )
  2. தக்காளி - 1
  3. இஞ்சி துருவியது - மேஜைக்கரண்டி 
  4. பூண்டு துருவியது - 1 மேஜைக்கரண்டி 
  5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  6. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  7. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  8. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 
  9. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
  10. மல்லித்தழை - சிறிது 
  11. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பெரிய வெங்காயம் - 1
செய்முறை -
  1. ராஜ்மாவை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற  வைக்கவும்.
  2. ஊறிய பிறகு ராஜ்மாவுடன் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.
  3. வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும். தக்காளியை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் துருவி வைத்துள்ள இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும்  அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.
  6. தக்காளி நன்கு வெந்ததும் அதனுடன் மிளகாய்  தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து  அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ராஜ்மா வேக வைத்த தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  7. பச்சை வாடை போனதும் அவித்து வைத்துள்ள ராஜ்மாவை சேர்க்கவும்.
  8. மசாலா கெட்டியானதும் கரம் மசாலா, மல்லித்தழை சேர்த்து உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும்.
  9. சுவையான ராஜ்மா மசாலா ரெடி. பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

18 comments:

  1. சூப்பர்...ராஜ்மாவிற்கு எத்தனை விசில் அம்மா வைக்கனும்?? ஒரு நாள் பல விசில் வைத்தும் வேகவே இல்லை.. அதிலிருந்து வாங்குவதில்லை..

    ReplyDelete
    Replies
    1. சரியான கேள்வி கேட்டிருக்க அபி. இது எளிதில் வேகாது. எனவே வெயிட் வைத்து முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம் கழித்து அடுப்பை ஆஃப் பண்ணி விடு.

      Delete
  2. ராஜ்மா - செய்ததில்லை..

    செய்து விடலாம்.. வாழ்க நலம்..

    ReplyDelete
  3. ராஜ்மா மிகவும் பிடித்த ஒன்று...அடிக்கடி செய்வதுண்டு...சூப்பர் சகோ

    ReplyDelete
  4. பெயரே வித்தியாசமாக இருக்கின்றதே... வடநாட்டு ஐயிட்டமோ...

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ. பஞ்சாபி ராஜ் மசாலா என்று சொல்வாங்க. நம் ஊரிலும் நிறைய கிடைக்கிறது.

      Delete
  5. தங்கள் தளத்தை கண்டத்தில் மகிழ்ச்சி... இனி என் சமையலும் கொஞ்சம் மெருகேற வாய்ப்பிருக்கிறது

    ReplyDelete
  6. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. ராஜ்மா கேள்விப்பட்டதில்லை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. கருத்துக்கு நன்றி மனோ அக்கா.

    ReplyDelete
  9. Cooked.... It was awesome.... Thank you amma

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...