Sunday, June 12, 2016

மீன் குழம்பு - 2 / Fish Curry


பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வஞ்சீரம் மீன் - 1/4 கிலோ 
  2. தக்காளி - 1
  3. புளி - சிறிய எலுமிச்சை அளவு 
  4. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. மல்லித்தூள் - 3 மேஜைக்கரண்டி 
  6. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 6 மேஜைக்கரண்டி 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. வெந்தயம் - 1 தேக்கரண்டி 
  4. சின்ன வெங்காயம் - 15
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. மீனை நன்றாக கழுவி வைக்கவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். தேங்காயை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  2. புளியை தண்ணீரில் ஊற வைத்து ஒரு கப் அளவுக்கு கரைத்து வைக்கவும்.
  3. அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் வெந்தயம் போடவும். 
  4. வெந்தயம் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து  மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
  6. பிறகு அதனுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  7. மசாலா வாடை அடங்கியதும் தேங்காய் கலவையை சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து மீன் துண்டுகளை சேர்க்கவும்.
  8. மீன் வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும். சுவையான மீன் குழம்பு ரெடி.

12 comments:

  1. ஸூப்பர் புகைப்படங்களுடன்......

    ReplyDelete
  2. அருமையான மீன் குழம்பு!!

    ReplyDelete
  3. ஹை..நல்லாயிருக்கு அம்மா.. கிட்டதட்ட நானும் இது போலவே தான் செய்வேன்.. மல்லி, மிளகாய் பொடிக்கு பதில் குழம்பு பொடி சேர்ப்பேன்.. பூண்டு சேர்க்க மாட்டீங்களோ??

    ReplyDelete
    Replies
    1. நான் பூண்டு சேர்க்க மாட்டேன் அபி.

      Delete
  4. Amma Nice receipe. Your vessel looking good.

    ReplyDelete
  5. அருமை அம்மா

    ReplyDelete
  6. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...