பரிமாறும் அளவு - 4 நபருக்கு
தேவையான பொருள்கள்-
- கோவைக்காய் - 300கிராம்
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- மல்லித்தழை - சிறிது
- எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- கோவைக்காயை வட்டவட்டமாகவும் வெங்காயத்தை பொடிதாகவும் நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு போடவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள கோவைக்காயை சேர்த்து 2 நிமிடம் நன்றாக கிளறி அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
- தண்ணீர் வற்றி காய் வெந்ததும் மிளகாய் தூள் சேர்த்து எல்லா இடங்களிலும் படுமாறு நன்கு கிளறவும். இறுதியில் தேங்காய் துருவல், மல்லித்தழை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான கோவைக்காய் பொரியல் ரெடி. சாம்பார் சாதம், புளிக்குழம்பு சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
ஆஹா.. அருமை!..
ReplyDeleteஇங்கே (குவைத்தில்) மற்ற காய்கறிகளைப் போல
கோவைக்காயும் தாராளமாகக் கிடைக்கின்றது..
வாரத்தில் இரண்டு நாள் கோவைக்காய் தான்!..
வாழ்க நலம்!..
வருகைக்கு நன்றி சார். வாரத்தில் ஒரு நாள் இந்த முறையிலும் செய்து பாருங்கள் சார்.
Deleteஆஹா அருமையான பொரியல் படமே அழகாக இருக்கின்றது.
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ.
DeleteVery nice..
ReplyDeleteநன்றி ஷமீ.
Deleteகோவைக்காய் பொரியல் சுவை....சகோ
ReplyDeleteநானும் செய்து வைத்து இருக்கிறேன் சற்று வேறு படும்.
உங்கள் முறைப்படி செய்து பார்க்கிறேன் சகோ....
இந்த முறையிலும் செய்து பாருங்கள் சகோ.
Deleteஅருமையான செய்முறைக்கு நன்றி!
ReplyDeleteசெய்முறைக்கு நன்றி கோவைக்காய் எங்கள் வீட்டில் அடிக்கடி பயன்படுத்துவோம்
ReplyDeleteவெகுநாள் கழித்து தங்கள் தளம் வந்து பொரியலை ருசித்தேன். நன்றி.
ReplyDeleteபார்க்கவே அருமையா இருக்கு . முயற்சி செய்து பார்க்கிறேன்
ReplyDelete