பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- சிறுகிழங்கு - 1/4 கிலோ
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- சிறுகிழங்கை 2 மணி நேரம் ஊற வைத்து மண் போகும் வரை நன்றாக கழுவி தோல் சீவிக்கொள்ளவும்.
- தோல் சீவிய கிழங்குகளை பொடிதாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும். அப்போது தான் கறுத்து போகாமல் இருக்கும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, காயத்தூள் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பாதி வதங்கியதும் சிறுகிழங்கு துண்டுகளளுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாக வரும் வரை நன்கு வதக்கவும்.
- கிழங்கு துண்டுகள் நல்ல பொன்னிறமானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மிளகுத்தூள், சேர்த்து எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான சிறுகிழங்கு ப்ரை ரெடி. சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
ஸூப்பர் ஐயிட்டம்
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ.
Deleteருசித்தேன்.
ReplyDeleteருசித்தமைக்கு நன்றி சார்.
Deleteசெய்து பார்த்து ருசிக்கணும் அம்மா...
ReplyDeleteசெய்து பார்த்து ருசியுங்கள் குமார்.
ReplyDeleteபடங்களுடன்
ReplyDeleteசிறந்த வழிகாட்டல்
அருமையான பகிர்வு
கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html
கருத்துக்கு நன்றி சார்.
ReplyDeleteருசியான பதிவு! அருமை!
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்.
ReplyDeleteஒரு அருமையான சமையல், தையல் கலை பற்றிய விபரங்கள் அடங்கிய பதிவு இருக்கின்றது. அதன் இணைப்பு கொடுத்திருக்கிறேன். நண்பர்கள் படித்து பகிர வேண்டுகிறேன். நன்றி திருமதி Saratha J
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் என்னுடைய வலைப்பூவில் இணைந்ததற்கும் நன்றி சார். தொடர்ந்து வந்து கருத்துக்களை சொல்லுங்கள்.
ReplyDeleteஅருமையாக இருக்கிறது சிறுகிழங்கு பொரியல்.
ReplyDeleteபடங்கள் செய்முறை விளக்கம் அருமை.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete