Friday, April 22, 2016

கத்தரிக்காய் வறுவல் / Brinjal Fry


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கத்தரிக்காய் - 6
  2. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 
  3. கடலை மாவு - 2 தேக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
  6. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை -
  1. கத்தரிக்காய்களை வட்டவட்டமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  2. பிறகு தண்ணீரை வடித்து விட்டு அதன் மேல் மிளகாய் தூள், கடலைமாவு, மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கத்தரிக்காயின் மேல் எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவவும். கல் சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் கத்தரிக்காய் துண்டுகளை பரப்பி வைத்து சுற்றிலும் எண்ணெய் விடவும். 2 நிமிடம் ஆனதும் திருப்பி போடவும்.
  4. இருபுறமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா கத்தரிக்காய் துண்டுகளையும் இதே முறையில் வறுத்து எடுக்கவும். சுவையான கத்தரிக்காய் வறுவல் ரெடி. சாம்பார் சாதம், தயிர் சாதம் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
     

24 comments:

  1. புகைப்படம் பார்ப்பதற்கு புரோட்டா போல் இருக்கின்றதே...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  2. நான் விரும்பும் கத்திரியை
    நறுக்கி வறுவல் செய்ய
    நல்வழிகாட்டல்

    ReplyDelete
  3. பார்க்கவே இவ்வளவு நன்றாக இருக்கிறதே... வீட்டிலே நேயர் விருப்பமா சொல்லிட வேண்டியது தான்

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  4. செய்முறை விளக்கம் அருமை அம்மா
    நான் வீட்டில் செய்து சாப்பிட
    முயற்சி பார்க்கிறேன்....அம்மா

    ReplyDelete
    Replies
    1. செய்து சாப்பிடுங்கள் அஜய்.

      Delete
  5. ம்... இப்படி ஈசியாச் சொல்லிக் கொடுத்தா நாங்க செய்து சாப்பிட்டுக்குவோம்... அருமை அம்மா..

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி குமார்.

      Delete
  6. இந்த வெள்ளைக் கத்தரிக்காய் இப்போது அரிதாகி விட்டது..
    மருத்துவ குணம் உடையது இது..

    வித்தியாசமான செய்முறை.. வாழ்க நலம்!..

    ReplyDelete
  7. மோகன் ஜியின் பதிவிலிருந்து வந்தேன். இம்முறையில் தான் வங்காளத்தில் அதுவும் கல்கத்தாவில் கத்திரிக்காயைச் சமைப்பார்கள். பொதுவாக வட மாநிலங்களிலேயே இம்முறையில் பொரிக்கப்பட்ட கத்திரிக்காய் வறுவல் மிகவும் பிரபலம். மோகன் ஜி, கல்கத்தாவில் பார்க்கலையா? நான் வட மாநிலங்களில் இருந்தபோது சாப்பிட்டிருக்கேன். :)

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  8. சுவையான, சுலபமான சமையல் குறிப்பு!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி மனோக்கா.

      Delete
  9. கத்திரிக்காய் வறுவல் வெகு ஜோர்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சார்.

      Delete
  10. ஐக் நமக்குப் பிடித்த வறுவல்
    பார்த்ததும் பாடல் வருதுன்னா
    பாருங்களேன் ............!

    கத்தரிக் காயை வெட்டிக்
    ......கடலைமா பலதும் சேர்த்து
    சுத்தமாய் எண்ணை விட்டுச்
    ......சுடுகையில் அதனில் இட்டு
    பத்திர மாகப் பார்த்துப்
    ......பதத்துடன் இறக்கி வைத்தால்
    இத்தரை மணக்கும் என்பேன்
    ......இருந்துண வாரீர் வாரீர் !

    நீண்டநாள் வலைப்பக்கம் ம்ம்ம் வந்து இனி வருகிறேன் நல்ல சமையல் கலை கற்க நன்றி !

    ReplyDelete
    Replies
    1. கவிதை வடிவில் கருத்து சொன்ன சீராளனுக்கு நன்றி.

      Delete
  11. அருமையாக இருக்கு.

    நாங்கள் வாழைக்காயை தான் இம்முறையில் செய்வோம் மா.

    ReplyDelete
  12. கருத்துக்கு நன்றி ஷமீ.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...