Thursday, February 18, 2016

பொன்னாங்கண்ணி கீரை பொரியல் / Ponnangkanni Keerai Poriyal

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பொன்னாங் கண்ணி கீரை - ஒரு சிறிய கட்டு 
  2. பாசிப்பருப்பு - 3 மேஜைக்கரண்டி 
  3. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  4. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. சின்ன வெங்காயம் - 10
  5. மிளகாய் வத்தல் - 2
  6. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மூக்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் பாசிப்பருப்பு, காயத்தூள் சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைத்துக் கொள்ளவும்.
  2. கீரையை நன்றாக கழுவி காம்புகளை ஆய்ந்து பொடிதாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை வெங்காயம், மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள கீரையும், உப்பும் சேர்த்து நன்றாக கிளறவும். கீரையில் தண்ணீர் இருப்பதால் தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.
  5.  கீரை நன்கு வெந்ததும் அவித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். 
  6. சுவையான பொன்னாங்கண்ணி கீரை பொரியல் ரெடி. சாம்பார் சாதம், புளிக்குழம்பு சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

13 comments:

  1. சத்தான பொன்னாங்கண்ணி கீரைப் பொரியல்...அருமை சகோ
    காயம் மட்டும் சேர்ப்பது இல்லை. மற்றபடி இதே போல் தான் செய்வோம். நிறம் மாறாமல் சூப்பராக செய்து இருக்கிறீர்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  2. ஸூப்பர் கீரை எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
  3. நான் இதுவரை பொரியல் செய்ததில்லைமா.இந்த கீரையில் கூட்டு தான் வைப்பேன்.பொரியல் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. செய்து பாரு அபி நன்றாக இருக்கும்.

      Delete
  4. பொன்னாங்கண்ணி கீரைப்பொரியல் பார்க்கவே நல்லாயிருக்கு அக்கா. அம்மா அடிக்கடி செய்வதுண்டு. ரெம்ப பிடித்த கீரை. இங்கு கிடைத்தால் வாங்கி உங்க குறிப்பின்படி செய்துபார்கிறேன்.

    ReplyDelete
  5. கீரை பொரியல் சூப்பர்.

    பொன்னாங்கண்ணி கீரையில் இதுவரை செய்ததில்லை. கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. செய்து பாருங்கள் ஷமீ.

    ReplyDelete
  7. ஊரில் இருக்கும் போது பொன்னாங்கண்ணி சாப்பிட்டது...
    ஊருக்கு வரும்போது செய்யச் சொல்லி சாப்பிடலாம்...

    ReplyDelete
  8. படத்திலே அருமையாக
    இருக்கிறது...
    செய்து தின்றால் அதை
    விட ஆரோக்கியம் கிடைக்கும் ...
    செய்து சாப்பிட்டு பார்க்கிறேன் அம்மா...

    ReplyDelete
  9. ஆமா அஜய் ஆரோக்கியமான கீரை பொரியலை செய்து பாருங்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...