![]() |
பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- உருளைக்கிழங்கு - 3
- தக்காளி - 1
- பெரிய வெங்காயம் - 1/2
- தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- மல்லித்தழை - சிறிது
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1/2
- கறிவேப்பிலை - சிறிது
- அடுப்பில் குக்கரில் உருளைக்கிழங்கு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- நீராவி அடங்கியதும் மூடியை திறந்து உருளைக்கிழங்குகளை சிறிது நேரம் ஆறவிட்டு தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடிதாகவும் நறுக்கி வைக்கவும்.
- தேங்காய் துருவல், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் பாதி அளவு, தக்காளி எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, மீதமுள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
- பிறகு அதனுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, மற்றும் உப்பு சேர்த்து கிளறி அதனுடன் 100 மில்லி தண்ணீர் சேர்க்கவும்.
- மசாலா கெட்டியானதும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான பூரி மசாலா ரெடி.