Friday, October 26, 2018

மிக்ஸர் சட்னி / Mixture Chutney


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. மிக்ஸர் - 1/2 கப் 
  2. தேங்காய் துருவல் - 1/4 கப் 
  3. மிளகாய் வத்தல் - 1
  4. உப்பு - சிறிது 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. எல்லா பொருள்களையும் மிக்சியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  அரைக்கவும்.
  2. அடுப்பில் கடாயயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். இட்லி, தோசைக்கு சுவையான மிக்ஸர் சட்னி ரெடி

8 comments:

  1. ஆஹா இது கேள்விப்படாத புதுமையாக இருக்கிறதே...

    ReplyDelete
  2. ரொம்பப் புதுசு! செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. ரொம்பவும் வித்தியாசமாய் புதுசாய் இருக்கிறது! செய்து பார்க்கிறேன்!

    ReplyDelete
  4. வாவ்.அட்டகாசம். ! செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. மிக்ஸர் சட்னியா...சூப்பர்..சூப்பர்....அடுத்து பக்கோடா சட்னி எதிர்பார்கிறேன்....

    ReplyDelete
  6. சாரதா அம்மா எப்படி இருக்கிங்க?

    வீட்டில் அனைவரும் நலமா?

    நீங்கள் இப்பொழுது அதிகம் பதிவிடுவதில்லையா?

    ReplyDelete
  7. ஷமீ நாங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறோம். நீங்க எங்கள் எல்லோரையும் விசாரித்தற்கு மிக்க நன்றி. நீங்க எப்படி இருக்கீங்க ஷமீ ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      நலமா சகோதரி? எப்படி இருக்கிறீர்கள்.? நானும் கேட்க வேண்டுமென நினைத்துக் கொண்டேயிருக்கிறேன். முன்பு போல் அடிக்கடி நீங்களும் பதிவுலகம் வருவதில்லையே? நானும் நடுவில் கொஞ்சம் காணாமல் சென்று மறுபடியும் இங்கு வந்து அனைவரையும் சந்தித்து, ஏதோ எழுதி அளவளாவி வருகிறேன். உங்கள் இந்த பதிவும் புதுமையாக உள்ளது. சுவையான செய்முறைகளை, படங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...