![]() |
தேவையான பொருள்கள் -
- சப்பாத்தி - 3
- முட்டை - 1
- காலி பிளவர்( - 2 மேஜைக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- தக்காளி சாஸ் - 1 மேஜைக்கரண்டி
- உப்பு - சிறிது
- மல்லித்தழை - சிறிது
தாளிக்க -
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
செய்முறை -
- சப்பாத்தியை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயம், காலிபிளவர், மல்லித்தழை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து எண்ணெய்யில் ஊற்றி அதனுடன் சிறிது உப்பும் சேர்த்து பொடிமாஸ் செய்து தனியே வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் அதே கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பிறகு அதனுடன் 1/4 கப் தண்ணீரும், காலிபிளவர், மற்றும் சிறிது உப்பும் சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும்
- காலிபிளவர் வெந்ததும் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் முட்டை பொடிமாஸ், சப்பாத்தி துண்டுகள் சேர்த்து நன்றாக கிளறவும்.
- இறுதியில் மல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான வெஜ் முட்டை சப்பாத்தி ரெடி. காலை டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்தும் கொடுக்கலாம்.
நல்ல குறிப்பு.
ReplyDeleteமிக்க நன்றி.
Deleteவணக்கம் சகோ நலமா ?
ReplyDeleteபடங்களே ஆசையைத் தூண்டுகிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.
நான் நன்றாக இருக்கிறேன். நலம் பற்றி விசாரித்தமைக்கு நன்றி சகோ. தொடர்ந்து கண்டிப்பாக எழுதுகிறேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? எப்படி உள்ளீர்கள்? உங்களை மீண்டும் வலைத்தளத்தில் காணும் போது மகிழ்வாக உள்ளது. தொடர்ந்து எழுத வாருங்கள். செய்முறை. படங்கள் நன்று. பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நான் நன்றாக இருக்கிறேன் சகோதரி நீங்க நலமா ? கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன்.
Deleteநல்லதொரு குறிப்பு...
ReplyDeleteமீண்டும் வலைப்பூ வந்தமைக்கு நன்றி... தொடர வாழ்த்துகள்...
வாழ்த்துக்கு மிக்க நன்றி.
ReplyDeleteசாரதா அம்மா, நலமா?
ReplyDeleteஉங்கள் பதிவு பார்த்து மிகவும் மகிழ்ச்சி..
முட்டை சப்பாத்தி செய்முறை அருமை..
நான் நலம் ஷமி. நீங்களும் குட்டி பாப்பாவும் எப்படி இருக்கீங்க ?
ReplyDelete