Tuesday, October 16, 2018

காலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. நறுக்கிய காலிபிளவர் - 1/2 கப் 
  2. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. உப்பு - தேவையான அளவு
  5. மல்லித்தழை - சிறிது
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 1/4 கப் 
  2. தக்காளி - 1
  3. சின்ன வெங்காயம் - 6
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 தேக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  4. நறுக்கிய வெங்காயம் - சிறிது
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. தேங்காய் துருவல், தக்காளி, சின்ன வெங்காயம் மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் காலிபிளவர் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  3. பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கூட்டு கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் கூட்டில் சேர்த்து கலக்கி விடவும்.
  5. சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு சுவையான காலிப்ளவர் கூட்டு ரெடி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...