பிரட் சில்லி காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இனி பிரெட்டை வைத்து பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் !
தேவையான பொருள்கள் -
- பிரட் துண்டுகள் - 4
- குடமிளகாய் - பாதி
- பட்டர் - 25 கிராம்
- பூண்டு பற்கள் - 2
- மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
- காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
- தக்காளி சாஸ் - 1 மேஜைக்கரண்டி
- உப்பு - சிறிது
- மல்லித்தழை - சிறிது
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- வெங்காயத்தை நீள வாக்கிலும், குடமிளகாயை பொடிதாகவும் நறுக்கி வைக்கவும். பூண்டுப்பற்களை ஒன்றிரெண்டாக தட்டி வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து பட்டரை ஊற்றி சூடு பண்ணிக்கொள்ளவும்.
- அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் பிரட்டை வைத்து சுற்றிலும் பட்டர் ஊற்றி பிரட் மேலும் தேய்த்து விடவும்.
- பிறகு மறுபுறம் திருப்பி போட்டு சுற்றிலும் பட்டரை ஊற்றி பிரட் மேலும் தேய்த்து டோஸ்ட் பண்ணிக்கொள்ளவும். எல்லா பிரெட்டையும் இதே போல் டோஸ்ட் பண்ணி சிறிய துண்டுகளாக கட் பண்ணிக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு அதோடு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தட்டி வைத்துள்ள பூண்டுப்பற்கள், குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பிறகு அதனுடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.
- பிறகு அதனுடன் பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பிரெட் சில்லி ரெடி.
அருமை...
ReplyDeleteகருத்துக்கு நன்றி சார்.
ReplyDeleteசுலபமாக இருக்கிறது.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅழகான தெளிவான படங்களுடன் அருமையாய் செய்து காண்பித்து இருக்கிறீர்கள் சகோதரி. பிரட் சில்லி நன்றாக பிரமாதமாக வந்திருக்கிறது. பார்க்கவே மிக அழகாக உள்ளது. கண்டிப்பாக நானும் இந்த மாதிரி ஒருதடவை முயற்சிக்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ப்ரெட் உப்புமா என்போம். கொஞ்சம் உதிர்த்து விடுவோம். இப்படியும் செய்து பார்க்கலாம். இந்த மாதிரி ரோஸ்ட் பண்ணிய ப்ரெட் துண்டங்கள் வெஜிடபுள் சாதத்தோடு அல்லது தக்காளி சாதத்தோடு கலந்து விடுவேன். ருசியாக இருக்கும்.
ReplyDeleteஅருமை அம்மா..!
ReplyDeleteசூப்பர். தண்ணீர் விடுவதால் ப்ரெட் கொஞ்சம் தளர்வாக ஆகிவிடாதா ?
ReplyDeleteYen ipolam upload panrathu ila.. Yen madam
ReplyDeleteஅருமையான எளிய செய்முறை .... நன்றி!
ReplyDeletehttps://www.scientificjudgment.com/