Wednesday, July 18, 2018

வடகறி / Vada Curry



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கடலைப்பருப்பு - 1/2 கப் 
  2. மிளகாய் வத்தல் - 2
  3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி 
  4. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
  5. தக்காளி - 1
  6. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  7. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  8. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  10. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
  11. உப்பு - தேவையான அளவு 
  12. மல்லித்தழை - சிறிது 
தேங்காய் பால் எடுக்க -
  1. தேங்காய் துருவல் - 1/2 கப் 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1 இன்ச் அளவு 
  3. கிராம்பு - 2
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் மிளகாய் வத்தல்,  பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  2. வெங்காயம், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் நறுக்கி வைக்கவும்.
  3. தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து 3/4 கப் அளவுக்கு பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வடைகளாக தட்டி சுட்டு சிறிது நேரம் ஆற விடவும். ஆறியதும் சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
  5. அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தை  வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் கறிவேப்பிலை,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  7. தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில்  மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி அதனுடன் உப்பும், ஒரு கப் தண்ணீரும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மசாலா வாடை போகும் வரை கொதிக்கவிடவும். 
  8. மசாலா வாடை போனதும் தேங்காய் பால் சேர்க்கவும். பிறகு அதனுடன் வடை துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் வரை அடுப்பை சிம்மில் வைக்கவும். 
  9. இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.சுவையான வடகறி ரெடி. இட்லிக்கு  சைட் டிஷ்சாக வைக்கலாம்.

13 comments:

  1. மிகவும் பிடிக்கும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி

      Delete
  2. வணக்கம் சகோதரி

    நலமா? அருமையாக வடகறியை அழகான படங்களுடன் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி. செய்முறை சுலபமாக உள்ளது. பருப்பு வகைகளில் கடலை பருப்பு மட்டும் போதுமா? பார்க்கும் போதே செய்து சாப்பிட்டு பார்க்க தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. நான் நலம் சகோதரி. கருத்துக்கு மிக்க நன்றி. கடலைப்பருப்பு மட்டும் போதுமானது.

    ReplyDelete
  4. வணக்கம் சகோ எனக்கும் பிடித்தமானதே....

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  6. ரொம்பநாள் கழித்து உங்கள் தளம் வருகிறேன் அம்மா,
    வந்ததும் ருசியான வடகறி ரெடியா...!!😃😃😃

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  7. விளக்கமாக எழுதி இருக்கீங்க. என் மன்னி இப்படித் தான் செய்வார். காரம் தூக்கலாக இருக்கும் என்பதால் நான் அதிகம் சாப்பிட மாட்டேன். முன்னெல்லாம் பகோடா குருமா என சென்னை ஓட்டல்களில் கொடுப்பாங்க! முதல்நாள் பகோடாவைத் தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி , பூண்டு அரைத்த விழுதில் கலந்து சூடு செய்து கொடுப்பார்கள். சாப்பிட பயமா இருக்கும். அதோடு எழுபதுகளில் சென்னைக்குக் குடித்தனம் வந்தப்போ இட்லி, வடகறி பிரபலமாப் பேசுவாங்க. விசாரித்ததில் முதல்நாளைய போண்டா, பஜ்ஜி, வடை தோசை, இட்லி போன்றவற்றை முதல்நாள் சாம்பாரோடு சேத்துக் கொதிக்க வைத்து பூண்டு, வெங்காயம் அரைச்சு விடுவாங்கனு சொன்னாங்க! அதில் இருந்து சென்னை ஓட்டல்களில் வடகறிப்பக்கமே போனதில்லை. ஆனால் நீங்க சொல்வது சரியான முறை! இம்முறையில் செய்யும் எல்லா சைட் டிஷ்களும் வட மாநிலங்களில் கோஃப்தா என அழைக்கப்படும். மலாய் கோஃப்தா, பனீர் கோஃப்தா, இது நீங்க செய்திருப்பது சனா கோஃப்தா! :)))))

    ReplyDelete
  8. வருகை தந்து விரிவான கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. படங்களுடன் சிறந்த அறிமுகம்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...