பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- வறுத்த வேர்க்கடலை - 3/4 கப்
- பொட்டுக்கடலை - 1/4 கப்
- மிளகாய் வத்தல் - 2
- புளி - சிறிய கோலி அளவு
- பூண்டுப்பல் - 1
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
- மிளகாய் வத்தல், புளி இரண்டையும் தண்ணீரில் 10 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
- ஊறிய பிறகு அதனுடன் வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பூண்டுப்பற்கள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் நன்றாக கலக்கி விடவும்.
- இட்லி, தோசைக்கு சுவையான வேர்க்கடலை சட்னி ரெடி.
படங்களே அழகாக இருக்கிறதே...
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி சகோ.
ReplyDeleteசெய்கிறோம்... நன்றி...
ReplyDeleteஅருமை. பூண்டு இல்லாமல் செய்வோம்.
ReplyDeleteஆஹா...வேர்கடலையிலையுமா சட்னி செய்வாங்க..?
ReplyDelete