Tuesday, April 18, 2017

பனீர் 65 / Paneer 65


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பனீர் - 100 கிராம் 
  2. மைதாமாவு - 2 மேஜைக்கரண்டி 
  3. சோளமாவு - 1 மேஜைக்கரண்டி 
  4. தயிர் - 1 மேஜைக்கரண்டி 
  5. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  6. சிவப்பு மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  7. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. லெமன் ஜூஸ் - 1 மேஜைக்கரண்டி 
  9. உப்பு - தேவையான அளவு 
  10. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. பனீரை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, சோளமாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், லெமன் ஜூஸ், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு பனீர் துண்டுகளை டிப் பண்ணி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு பனீர் துண்டுகளை போடவும்.
  3. ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். சுவையான பனீர் 65 ரெடி.

5 comments:

  1. பனீர் விருப்பத்திற்குரிய ஒன்று..

    இருந்தாலும் பனீர் 65 செய்து பார்க்கலாம்..

    பனீர் 8 தான் இருக்குது!.. மத்ததெல்லாம் எங்கே?..

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் நகைச்சுவையான கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  2. பனீர் 65 ஸூப்பர்

    ReplyDelete
  3. சுவையான சமையல்
    அருமையான உணவு

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...