Friday, April 7, 2017

காளான் குழம்பு - 2 / Mushroom Gravy - 2


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. காளான் - 200 கிராம் 
  2. தக்காளி - 1
  3. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 
  4. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  8. மல்லித்தழை - சிறிது 
  9. உப்பு - தேவையான அளவு 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 1/4 கப் 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - ஒரு இன்ச் அளவு 
  3. கிராம்பு - 2
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் காளானை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைக்கவும்.
  2. தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் காளானை சேர்த்து கிளறவும்.
  5. காளான் வதங்கியதும் ஒரு கப் தண்ணீரும், உப்பும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
  6. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான காளான் குழம்பு ரெடி. பூரி, சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். 

7 comments:

  1. ஆஹா காஸ்ட்லியான ஐயிட்டம் ஸூப்பர்

    ReplyDelete
  2. காளான் குழம்பு
    எனக்கு நாவூறுது
    அருமையான கறி!

    ReplyDelete
  3. வணக்கம் !

    நான் இதுவரையில் காளான் சாப்பிடவில்லை
    சந்தர்ப்பங்கள் கிடைத்தும் ஏனோ மனம் நாடவில்லை
    ஆனால் உங்கள் சமையல் பார்த்தவுடன் நாவூறுது நன்றி

    ReplyDelete
  4. நல்ல சமையல் குறிப்பு....

    ReplyDelete
  5. arumai vaalthukal. pukaipadthudan soliya vidam arumai. thagavaluku oru poruli ientheram kondu arikum podu athil irukum sakthi veliya selkerathu athanaal suvaium matrum seekarama antha porul ketu poguthu meelum thagavaluku http://www.anatomictherapy.org/ video vil kelvi padil pakutheiyai paarkavum.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...