பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- பனீர் - 100 கிராம்
- மைதாமாவு - 2 மேஜைக்கரண்டி
- சோளமாவு - 1 மேஜைக்கரண்டி
- தயிர் - 1 மேஜைக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
- கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
- லெமன் ஜூஸ் - 1 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு
- பனீரை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, சோளமாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், லெமன் ஜூஸ், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
- பிறகு பனீர் துண்டுகளை டிப் பண்ணி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு பனீர் துண்டுகளை போடவும்.
- ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். சுவையான பனீர் 65 ரெடி.
பனீர் விருப்பத்திற்குரிய ஒன்று..
ReplyDeleteஇருந்தாலும் பனீர் 65 செய்து பார்க்கலாம்..
பனீர் 8 தான் இருக்குது!.. மத்ததெல்லாம் எங்கே?..
முதல் வருகைக்கும் நகைச்சுவையான கருத்துக்கும் நன்றி சார்.
Deleteபனீர் 65 ஸூப்பர்
ReplyDeleteநன்றி சகோ.
Deleteசுவையான சமையல்
ReplyDeleteஅருமையான உணவு