பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- தேங்காய் துருவல் - 1/2 கப்
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- சின்ன வெங்காயம் - 10
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மூன்றையும் போட்டு வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல், மல்லித்தழை இரண்டையும் சேர்த்து வதக்கி சிறிது நேரம் ஆறவிடவும். நன்கு ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான தேங்காய் சட்னி ரெடி.
பச்சை நிறத்தில் காணும் பொழுது ஆசையாக இருக்கிறது
ReplyDeleteதேங்காய் சட்னி அருமை
ReplyDeleteசெய்முறை வழிகாட்டலும் அருமை
அட்டகாசம் . 2 இட்லி வேணும் :) இல்லாட்டி மொறுமொறுன்னு ஒரு ரோஸ்ட் :)
ReplyDelete