பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- பாஸ்மதி அரிசி - 1/2 கப்
- தக்காளி - 2
- பெரிய வெங்காயம் - 2
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- பட்டை - 1 இன்ச் அளவு
- கிராம்பு - 2
- பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். தக்காளி , வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு சுருள வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், மல்லித்தழை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும்.
- பிறகு ஒரு கப் தண்ணீருடன் உப்பு மற்றும் ஊற வைத்துள்ள அரிசி சேர்த்து மூடி போடவும்.
- நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான தக்காளி சாதம் ரெடி.
ஆசையை தூண்டி விட்டது பகிர்வு
ReplyDeleteகருத்துக்கு நன்றி சகோ.
Deleteஅருமை... நன்றி அம்மா...
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
Deleteசுவை!
ReplyDeleteநன்றி.
DeleteSuper recipe.
ReplyDeleteThank you Shamee
Deleteசுவையான், எளிதான தக்காளி சாதம், அருமை.
ReplyDeleteகருத்துக்கு நன்றி சகோ.
ReplyDeleteஅருமையான பகிர்வு
ReplyDelete