ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மஞ்சள் கிழங்கு எல்லா இடங்களிலும் கிடைக்கும். இந்த மஞ்சள் கிழங்கை உபயோகித்து நாம் வீட்டில் மஞ்சள் தூள் செய்து வைத்துக்கொள்ளலாம். இனி வீட்டில் மஞ்சள் தூள் எப்படி செய்வதென்று பார்ப்போம் !
தேவையான பொருள்கள் -
செய்முறை -
தேவையான பொருள்கள் -
- மஞ்சள் கிழங்கு - 1/2 கிலோ
செய்முறை -
- மஞ்சள் கிழங்குகளை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைப்பதால் கிழங்கிலுள்ள மண் எல்லாம் அடியில் தங்கி விடும். பிறகு தண்ணீரை நன்கு வடித்து விட்டு வேறு தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மஞ்சள் கிழங்குகளை போட்டு கிழங்குகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- பிறகு தண்ணீரை வடித்து விட்டு சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு வட்ட வட்டமாக வெட்டி வைக்கவும். வெட்டும் போது கையில் கிளவுஸ் மாட்டிக்கொண்டு வெட்டவும். கிளவுஸ் மாட்டாமல் வெட்டினால் கை எல்லாம் மஞ்சளாகி விடும்.
- வெட்டிய மஞ்சள் கிழங்குகளை வெயில் படும் இடங்களில் அல்லது மொட்டை மாடியில் 3 நாட்கள் வரை காய வைக்கவும்.
- காய்ந்த மஞ்சள் துண்டுகளை மிஷினில் கொடுத்து திரிக்கவும். திரித்த மஞ்சள் பொடியை ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். அரைக்கிலோ அளவுக்கு கால் கிலோ மஞ்சள் தூள் கிடைக்கும்.
வீட்டில் செய்வதாக சொல்லி விட்டார்கள்... நன்றி அம்மா...
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஉபயோகமான குறிப்பு.
ReplyDeleteஅம்மா செய்வார்கள்...
ReplyDeleteஉபயோகமான குறிப்பு.
மனைவி செய்வதில்லை... அவரிடம் சொல்லிச் செய்யச் சொல்ல வேண்டும் அம்மா...
வணக்கம்
ReplyDeleteஅம்மா
இப்படியான வழிமுறையை நான் படித்து விட்டேன் நிச்சயம் மனைவியிடம் சொல்லி செய்து பார்க்கிறோம்...பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் செய்முறை வழிகாட்டலை வரவேற்கிறேன்.
ReplyDeleteஉலர வைக்கும் முறை முன்பு தெரியாது. உப்பு சேர்த்து அவித்து, அரைத்து ப்ரிஜ்ஜில் வைப்பேன்.
ReplyDeleteஇங்கு கிழங்கு கிடைப்பது அபூர்வம். நட்டிருக்கிறேன். அறுவடையின் போது உங்கள் செய்முறை உபயோகமாக இருக்கும். நன்றி.
அருமை
ReplyDelete