Monday, November 21, 2016

உளுந்து சாதம் / Black urad dal Rice

கறுப்பு உளுந்து சாதம் எங்கள் ஊரில் மிகவும் பிரபலமானதாகும். உளுந்து சாதம் பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இந்த கறுப்பு உளுந்தை வைத்து உளுந்து சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம் !

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. அரிசி - 1 கப் 
  2. தோல் உளுந்து - 1/2 கப் 
  3. உப்பு - தேவையான அளவு 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. பூண்டு பற்கள் - 4
  3. சீரகம் - 1 தேக்கரண்டி 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அரிசி, தோல் உளுந்து இரண்டையும் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  2. தேங்காய் துருவல், பூண்டு பற்கள், சீரகம் மூன்றையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  3. குக்கரில் அரிசி, தோல் உளுந்து, உப்பு, அரைத்த தேங்காய் கலவை, எல்லாவற்றையும் போட்டு அதோடு 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மூடி போட்டு மூடவும்.
  4. நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வரும் வரை வைத்திருந்து அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி விடவும். சுவையான உளுந்து சாதம் ரெடி.
  5. உளுந்து சாதத்துடன் அவியல், தக்காளி பச்சடி, எள்ளுத் துவையல் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

18 comments:

  1. சிறந்த செய்முறை வழிகாட்டல்

    ReplyDelete
  2. ஆஹா புதுமையாக இருக்கின்றதே...

    ReplyDelete
  3. இதுவரை சாப்பிட்டதில்லை. ஒருமுறை முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  4. நன்றி... செய்து பார்க்கிறோம்...

    ReplyDelete
  5. இளம் பெண்களுக்கு நல்லது.. பருவமடைந்த பெண்களுக்கு மிக மிக நல்லது.. கர்ப்பப்பை வலுவாகும்.. குறைபாடுகள் ஏற்படாது..

    திருமணமாகாத ஆண்கள் இதனை அதிகம் சாப்பிடலாகாது என்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. விரிவான கருத்துக்கு நன்றி சார்.

      Delete
  6. அருமையான குறிப்பு...பகிர்வுக்கு நன்றி அம்மா..

    ReplyDelete
  7. நாங்களும் செய்வோம். ஆனால் தேங்காய் திருகி போட்டு சீரகம், பூண்டு போட்டு செய்வோம், சிலர் வெந்தயம் கொஞ்சம் போடுவார்கள். அரைத்து போட்டது இல்லை, உங்கள் முறையில் செய்து பார்க்கிறேன்.
    எங்கள் வீட்டிலும், எள் துவையல், தேங்காய் மிள்காய், புளி, உளுந்து வறுத்து துவையல், மல்லி, மிளகாய் புளி வறுத்து துவையல் அரைப்போம்.
    வடகம், வத்தல் வறுத்து சாப்பிடுவோம்.
    படங்களுடன் செய்முறை அருமை.

    ReplyDelete
  8. விரிவான கருத்துக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  9. நீண்ட் நாளாக தேடிக்கொண்டிருந்த குரிப்பு .மிக்க நன்ரி.

    ReplyDelete
  10. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...