பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள்-
- நெத்திலி மீன் - 1/4 கிலோ
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 1
- மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
- மல்லித் தூள் - 3 மேஜைக்கரண்டி
- சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
- புளி - சிறிய எலுமிச்சை அளவு
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - 1 கப்
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்ட
- வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- கறிவேப்பிலை - சிறிது
- நெத்திலி மீனை நன்றாக கழுவி அதன் மேல் 1/2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள், சிறிது உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடம் வரை ஊற வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். வெங்காயம், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் பொடிதாக வெட்டி வைக்கவும்.
- புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் அரைத்து ஒரு கப் அளவுக்கு பால் எடுத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு போடவும்.
- கடுகு வெடித்தவுடன் வெந்தயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
- பிறகு கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீர், உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
- மசாலா வாடை போனதும் தேங்காய் பாலை ஊற்றவும். கொதிக்க ஆரம்பித்ததும் மீன் துண்டுகளை போடவும். 3 நிமிடங்களில் மீன் வெந்து விடும். தேங்காய் பாலும் அதிக நேரம் கொதிக்க கூடாது.
- மீன் வெந்ததும் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான நெத்திலி மீன் குழம்பு ரெடி.
ஆஹா ஸூப்பர் வாசம் சகோ.
ReplyDeleteஅட...! சூப்பர்...!!!
ReplyDeleteகருத்துக்கு நன்றி சார்.
Deleteசிறந்த வழிகாட்டல்
ReplyDeleteநன்றி சார்.
Deleteரசித்தேன், ருசித்தேன்.
ReplyDeleteகருத்துக்கு நன்றி சார்.
Deleteகில்லர்ஜி, ஜம்புலிங்கம் ஐயா, DD ஆகியோர் சொல்வதிலிருந்து சுவையாக இருக்கும் என்று தெரிகிறது!
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
Deleteஆஹா.... சூப்பர்...
ReplyDeleteநெத்திலி குழம்பு அது ஒரு ருசிதான்...
கருத்துக்கு நன்றி குமார்.
Deleteஅஹா செம ருசி.
ReplyDeleteமுதல்க வருகைக்கும் ருத்துக்கும் நன்றி சகோ.
ReplyDeletenyc
ReplyDelete