தேவையான பொருள்கள் -
- சப்பாத்தி - 4
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 1
- தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- சிவப்பு புட் கலர் - சிறிது
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - சிறிது
- எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- சப்பாத்தி, தக்காளி, வெங்காயம் மூன்றையும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
- புட் கலரை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தக்காளி சாஸ், கரைத்து வைத்துள்ள கலர் தண்ணீர் எல்லாவற்றயும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
- பிறகு அதனுடன் சப்பாத்தி துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறுதியில் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.
- சுவையான சில்லி சப்பாத்தி ரெடி. மீந்து போன சப்பாத்தியை இவ்வாறு செய்து சுவையாக சாப்பிடலாம்.
Nice recipe dear:)
ReplyDeleteHope to see you sometime in my space:)
www.masalakorb.com
நல்லதொரு சுவையான குறிப்பு!!
ReplyDeleteபார்க்கவே நாவில் சுவை ஊருகிறது,இந்த செய்முறையில் நானும் செய்து பார்க்கிறேன்...
ReplyDeleteநன்றி
வாழ்க வளமுடன்
"உண்டு மகிழ்வோமே உமது செயல் விளக்கத்
ReplyDeleteதொண்டு நன்று என்போமே"!
"சில்லி சப்பாத்தி" நல்ல செயல் முறை விளக்கம்! அருமை!
எனது வலைப் பூ வந்து கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி!
(சகோதரி! குழலின்னிசை வலைப்ப் பூவை உறுப்பினராக இணந்து
பதிவுகளைச் சூடி மகிழ வேண்டுகிறேன்) நன்றி!
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
ReplyDeleteThank you Padma.
மிக்க நன்றி மனோ அக்கா.
மிக்க நன்றி சரிதா.
மிக்க நன்றி சகோ.