பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள்
- வாழைக்காய் - 1
- கத்தரிக்காய் -2
- கடலைப்பருப்பு - 50 கிராம்
- தக்காளி - 1
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி
- சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
- காயம் - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
- வெங்காயம் - 1/4 பங்கு
- கறிவேப்பிலை - சிறிது
- கத்தரிக்காய், வாழைக்காய் இரண்டையும் பொடிதாக வெட்டி தண்ணீரில் போடவும்.
- கடலைப்பருப்பை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். தக்காளியை பொடிதாக வெட்டி வைக்கவும்.
- ஊறிய பருப்புடன் காயத்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
- மிக்ஸ்சியில் வெட்டி வைத்துள்ள தக்காளி, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- வாழைக்காய், கத்தரிக்காய், உப்பு மற்றும் அது மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும்.
- வெந்தவுடன் அவித்து வைத்துள்ள கடலைப்பருப்பு, அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்கவிடவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
- கூட்டு கெட்டியானதும் உப்பு சரி பார்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி கூட்டில் ஊற்றவும். சுவையான வாழைக்காய், கத்தரிக்காய் கூட்டு ரெடி.
healthy and yummy kootu
ReplyDelete