பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தேவையான பொருள்கள் -
- தக்காளி - 4
- சின்ன வெங்காயம் - 50 கிராம்
- பச்சை மிளகாய் - 2
- காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 1/4 பங்கு
- கறிவேப்பிலை - சிறிது
- முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மிளகாய் இரண்டையும் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி, காயத்தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்.
- பச்சை வாடை போனதும் அதனுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
- வெந்ததும் அதை சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு தக்காளி கலவையுடன் உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி கிச்சடியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான தக்காளி கிச்சடி ரெடி. இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
yummy chutney. wish you a happy pongal to you and your family.
ReplyDeleteawsome
ReplyDeleteThank you
Delete