Friday, February 20, 2015

அபியும் நானும் !!!

                                

அபியும் நானும் என்றால் எனது பேரன் அபிநவ்வும், நானும் தான்!   என் பேரனுடன் நான்  சந்தோஷமாக இருந்தததை உங்கள் எல்லோரிடம் பகிர்ந்து கொள்ள நினைத்து இதை எழுதுகிறேன்.

அமெரிக்காவிலிருக்கும் என்னுடைய பேரனும், மகளும் கடந்த நவம்பர் மாதம் எங்கள் ஊருக்கு வந்து  இரண்டு மாதங்கள் வரை இருந்தார்கள். அபிநவ் என்னுடன் இருக்கும் போது எனக்கு நேரம் போவதே தெரியாது.

என்னுடைய சமையலில் அவனுக்கு பிடித்தத டிபன் இட்லி, இடியாப்பம், பூரி, சப்பாத்தி போன்றவையாகும். இதை தவிர மேகி நூடுல்ஸ் பிடிக்கும். குழம்பு வகைகளில் காளான் குழம்பு மிகவும் பிடிக்கும்.

Ipad-ல் சில விளையாட்டுகளை விரும்பி விளையாடுவான். அவன் விளையாடும் போது என்னையும் பக்கத்தில் இருந்து பார்க்கச் சொல்வான். சில விளையாட்டுக்களை எனக்கும் சொல்லிக் கொடுப்பான். எனக்கும் அவனுடன் சேர்ந்து விளையாடுவது மிகவும் சந்தோஷமாக இருக்கும். டீ கப்பில் கலர் பால் வைத்து ஐஸ் கிரீம் என்று சொல்லி விளையாடுவான். அபியும் நானும் சில நேரங்களில் தோட்டத்தை ஒரு முறை சுற்றி வருவோம். அபிக்கு மண்வெட்டி வைத்து தோண்டி விளையாடுவதும் பிடிக்கும்.
                                                                            
 கோலம் போட்டு விளையாடுவதையும் மிகவும் விரும்புவான். திருக்கார்த்திகை அன்று அவனுடைய அம்மா போட்ட கோலத்தை மிகவும் ரசித்து பார்த்தான். அன்று என்னுடைய அம்மாவும் வந்திருந்தாங்க.திருக்கார்த்திகை அன்று இனிப்பு கொழுக்கட்டை செய்து சாமிக்கு படைத்தது அபியுடன் நாங்கள் எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடினோம்.                                                                                                               
                                                                         
தினமும் என்னுடன்  கடைக்கு  வந்து ஒரு கிண்டர் ஜாய் வாங்கி கொள்வான். ஒரே கடையில் வாங்குவதால் அந்த கடைக்கு same shop என்று பெயர் வைத்திருந்தான். எங்கள் தெருவில் கிறிஸ்தவர்கள் நிறைய பேர் இருப்பதால் எல்லோருடைய வீட்டிலும் ஸ்டார் போட்டிருந்தார்கள். அபியும், நானும் எனது மகளும் சூப்பர் மார்க்கெட் சென்று ஸ்டார் வாங்கி எங்கள் வீட்டிலும் போட்டிருந்தோம். மேலும் சில கடைகள், பொருட்காட்சி என்று அவனுடன் சென்று வந்தோம்.

டிசம்பர் மாதம் அபிநவ் அப்பாவும் இங்கு வந்துட்டாங்க. அப்பாவுடன் அபிநவ் சந்தோஷமாக பொழுதை கழித்தான். எனக்கும் எல்லோரும் இங்கு இருந்தது நேரம் போனதே தெரியவில்லை.
பொங்கலுக்கு கடைக்கு சென்று எல்லோருக்கும் டிரெஸ் வாங்கி வந்தோம். அபிக்கு வேஸ்டி, சட்டை,  அங்கவஸ்திரம்  என்று செட் ஆக எடுத்தோம்.

    அபிநவ் பொங்கல் டிரெஸ்சில்                                                                                   
பொங்கல் முடிந்தவுடன் மகள், மருமகன், பேரன் எல்லோரும் ஊருக்கு சென்று விட்டார்கள். என்னுடைய சந்தோஷத்தை உங்கள் எல்லோரிடம் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி
சாரதா 

24 comments:

  1. பேரனுடன் கழிந்த சந்தோஷமான தருணங்களை எங்களுடன் பகிந்த விதம் அருமை
    மல்லு வேட்டி மைனர் அபிநவ் வுக்கு எமது வாழ்த்துகள்

    அன்புடன் கில்லர்ஜி

    ReplyDelete
    Replies

    1. உங்களுடைய கருத்துக்கும் பேரனை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  2. சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டது அருமை.

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகை தந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி

      Delete
  3. பேரனுடனான சந்தோஷ தருணங்களை பகிர்ந்து கொண்டது அருமை அம்மா..

    ReplyDelete
  4. கருத்துக்கு மிக்க நன்றி குமார்.

    ReplyDelete
  5. "சொந்தம் எப்போதும் தொடர் கதைதான்
    முடிவே இல்லாதது!
    எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
    இனிய கதை இது!"

    ஆஹா! பேரன், மகள், மருமகன், என உறவு சொந்தங்கள் யாவும்,
    இளவேனிற்காலத்து பறவைகளாக பறந்து வந்து
    இளைப்பாறி சென்ற தருணங்களை, அனுபவ எண்ணங்களை
    எழுத்தாய் வடித்து, மகிழ்வை பகிர்ந்த தாய் உள்ளம், உண்மையிலேயே உயர்ந்த உள்ளம்!
    .
    "அபியும் நானும்" உணர்ச்சி நாதம்.

    புதுவை வேலு

    www.kuzhalinnisai.blospot.com

    ReplyDelete
    Replies
    1. கவிதை வடிவில் கருத்து சொன்னதற்கு நன்றி சகோ

      Delete
  6. பேரனுடன் நீங்களும் ஒரு குழந்தையாகி மகிழ்ந்த நிகழ்வுகளை படிக்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது,தங்கள் பகிர்வுக்கு நன்றி...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரிதா.

      Delete
  7. சூப்பர் அக்கா. பகிர்வுக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஆசியா நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      Delete
  8. I am happy,that u had a nice time with your grandson

    ReplyDelete
  9. அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!
    பேரன் என்றால் ஒரு தனி ஆனந்த உலக‌ம் தான் என்பதை உனர்ந்தவள் நான். அனுபவிப்பவளும்கூட! அதனால் உங்களின் மகிழ்சியான ஒவ்வொரு வ‌ரியையும் புரிந்து கொள்ள‌ முடிகிறது. அவைகளினூடே தெரியும் ஏக்கத்தையும் உணர்ந்து கொள்ள முடிகிறது!

    ReplyDelete
  10. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா.

    ReplyDelete
  11. அபியும் நானும் படம் பார்த்த உணர்வு.அங்கே அப்பா மகள், இங்கே பாட்டி பேரன்.....அருமை. அனைவரும் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  12. நெகிழ்வான தருணங்களை ஆழகாய் சொல்லி இருக்கிறீர்கள் சகோ...
    வேஷ்டி...யில் அருமை உங்கள் பேரன்.

    ReplyDelete
  13. மிகவும் ஆழமாக படித்து கருத்து சொன்னதற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  14. அன்பான பதிவு, அபி வேட்டி சட்டையில் அழகாக இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Shamee.

      Delete
  15. எனது தளம் தேடி வந்து இனியதாக கருத்துரைத்த தங்களுக்கு நன்றி..

    நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சாவூர் என்றாலும் -
    பூர்வீகம் திருநெல்வேலி.

    எங்கள் குலதெய்வம் வீற்றிருக்கும் தலம் உவரி.

    அந்தப் பக்கம் வந்து நெல்லை - பாளையங்கோட்டையைச் சுற்றிக் கொண்டு தஞ்சைக்குத் திரும்பும் போதெல்லாம் - இந்த மண் எம் முன்னோர்களின் பாதம் பட்டதல்லவா!.. என்று மனம் கசியும்.

    பேரனுடனான தங்களின் மகிழ்வான தருணங்களில் நானும் கலந்து கொண்டேன்.

    மனம் நெகிழ்வான பதிவு.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...