Tuesday, February 10, 2015

ஆப்பிள் சட்னி / Apple Chutney


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. ஆப்பிள் - 1
  2. காய்ந்த திராட்சை - 10
  3. மிளகாய் வத்தல் - 2
  4. கடலைப் பருப்பு - 2 மேஜைக்கரண்டி 
  5. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு                                                                                      
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/ 2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் ஆப்பிளை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
                                                                                                     
  2. அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் ஆப்பிளை போட்டு வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
                                                                      
  3. பிறகு ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி  சூடானதும் மிளகாய்வத்தலை வறுத்து ஆப்பிளோடு சேர்த்து வைக்கவும். பிறகு அதே எண்ணெயில் கடலைப்பருப்பு, காய்ந்த திராட்சை இரண்டையும் தனித் தனியாக வறுத்து ஆப்பிளோடு சேர்த்து சிறிது நேரம் ஆறவிடவும்.
                                                                            
  4. நன்கு ஆறியதும் அதோடு தேங்காய் துருவல், மற்றும் உப்பு சேர்த்து மிச்சியில் அரைக்கவும்.
                                                                               
  5. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். 
  6. சுவையான ஆப்பிள் சட்னி ரெடி. ஆப்பிள் சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

7 comments:

  1. Hi...Thanks for visiting my space:) I can read very little tamil but seeing pictures and little bit reading..can understand..Very nice recipe:)

    ReplyDelete
  2. apple la chutneya akka asaththuriinga....super pic ...nice and different recipe ... intha chutneyla inipu suvai theriyuma

    ReplyDelete
  3. Thank you padma.

    Sangeetha karuthukku mikka nantri. konjam pulippu swaiylla appllai vaithu seythu paarungal.

    ReplyDelete
  4. healthy and yummy chutney. Apple chutney is new one to me. inviting.

    ReplyDelete
  5. ஆப்பிள் சட்னி பார்க்கவே சூப்பராக இருக்கு...!!!
    நானும் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. ஆப்பிள் சட்னியா வித்தியாசமா இருக்கே,செய்முறையை குறித்து கொண்டேன்,முயற்சிக்கிறேன்...
    சத்தான பதிவு கொடுத்தமைக்கு நன்றி

    வாழ்க வளமுடன் ....

    ReplyDelete
  7. ஆப்பிள் சட்னியா வீட்டில் சொல்லி செய்து பார்க்கச் சொல்கிறேன் அம்மா...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...