Sunday, February 15, 2015

நெல்லிக்காய் ஜாம் / Amla Jam


தேவையான பொருள்கள் -
  1. நெல்லிக்காய் - 1/4 கிலோ 
  2. அச்சு வெல்லம் - 300 கிராம் 
  3. சுக்கு - சிறிய துண்டு 
  4. ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. புட் கலர் - சிறிது 
                                                              செய்முறை -
  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 10 நிமிடம் கழித்து நெல்லிக்காய் நன்றாக வெந்ததும் அடுப்பை அனைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து சிறிது நேரம் ஆற விடவும். 
                                                                     
  2. ஆறிய பிறகு நெல்லிக்காய்யை வெட்டி அதிலுள்ள கொட்டைகளை நீக்கி விடவும். பிறகு அதை மிக்ஸ்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். சுக்கை பொடி பண்ணி வைக்கவும்.
                                      
  3. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் அச்சு வெல்லம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். அதோடு அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காய் விழுதை சேர்த்து கெட்டிப்பதம் வரும் வரை கிளறவும்.
                                      
  4. இறுதியில் சுக்குத்தூள், ஏலக்காய் தூள் இரண்டையும் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான நெல்லிக்காய் ஜாம் ரெடி.

12 comments:

  1. நெல்லிக்காய் ஜாம் நல்லாயிருக்கே அம்மா...
    அருமை...

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குமார்.

      Delete
  2. நெல்லிக்காய் ஜாமைத் தடவி இரண்டு பிரட் உள்ளே தள்ளலாம்னா...முடியலையே... சகோ.
    சூப்பர்....

    ReplyDelete
    Replies
    1. பார்சல் அனுப்பி விடலாம் சகோ.

      Delete
  3. ஒவ்வொருமுறையும் புதுப்புது ரெசிபி தந்து அசத்துகிறீர்கள்,வாழ்த்துக்கள் ..
    நீங்கள் பதிவிட்டுருந்த முள்ளங்கி பொரியல் நேற்று செய்தேன் நன்றாக இருந்தது(முள்ளங்கி பொரியல் நேற்று தான் முதன்முதலாக செய்திருக்கிறேன்)...

    நன்றி
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரிதா.முள்ளங்கி பொரியல் செய்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி

      Delete
  4. நெல்லிக்காய் சட்னி அல்வா போல இருக்கின்றதே....
    நேரமிருப்பின் எமது குடிலுக்கும் வருகை தரவும்.
    கில்லர்ஜி.

    ReplyDelete
    Replies
    1. நெல்லிக்காய் சட்னி இல்லைஇது நெல்லிக்காய் ஜாம்.முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
    2. நெல்லிக்காய் ஜாம் ஐ நெல்லிக்காய் சட்னி என்றதால்தான் என்னை ஞாபகம் வந்து அங்கு வந்தீர்கள் முதல் தடவையே ஒரு குழப்பம் செய்தால் அது ஒரு புதுமையை ஏற்படுத்தும் ஆகவே இப்படிச்சொன்னேன்.

      Delete
  5. "அச்சுவெல்லம் நெல்லிக்காய்
    சுக்கு பொடி தூவி அக்கா(ய்)
    அரைத்தோமே அரை விழுதாய்
    கரையுதே நாவினிலே தேன் சுவையாய்

    மிச்சமில்லை! மீதி இல்லை
    நன்றி சொல்ல சொல்ல!
    அச்சமில்லை அச்சமில்லை!
    அக்கா(ய்)!"


    நெல்லிக்காய் ஜாம்!
    உண்மையிலே! ஜாம் ஜாம்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. கவிதையாக தொகுத்து கருத்து சொன்னதற்கு நன்றி சகோ.

      Delete
  6. எமது முதல் வருகை.நெல்லிக்காய் ஜாம் நல்லாயிருக்கே.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...