அபியும் நானும் என்றால் எனது பேரன் அபிநவ்வும், நானும் தான்! என் பேரனுடன் நான் சந்தோஷமாக இருந்தததை உங்கள் எல்லோரிடம் பகிர்ந்து கொள்ள நினைத்து இதை எழுதுகிறேன்.
அமெரிக்காவிலிருக்கும் என்னுடைய பேரனும், மகளும் கடந்த நவம்பர் மாதம் எங்கள் ஊருக்கு வந்து இரண்டு மாதங்கள் வரை இருந்தார்கள். அபிநவ் என்னுடன் இருக்கும் போது எனக்கு நேரம் போவதே தெரியாது.
என்னுடைய சமையலில் அவனுக்கு பிடித்தத டிபன் இட்லி, இடியாப்பம், பூரி, சப்பாத்தி போன்றவையாகும். இதை தவிர மேகி நூடுல்ஸ் பிடிக்கும். குழம்பு வகைகளில் காளான் குழம்பு மிகவும் பிடிக்கும்.
Ipad-ல் சில விளையாட்டுகளை விரும்பி விளையாடுவான். அவன் விளையாடும் போது என்னையும் பக்கத்தில் இருந்து பார்க்கச் சொல்வான். சில விளையாட்டுக்களை எனக்கும் சொல்லிக் கொடுப்பான். எனக்கும் அவனுடன் சேர்ந்து விளையாடுவது மிகவும் சந்தோஷமாக இருக்கும். டீ கப்பில் கலர் பால் வைத்து ஐஸ் கிரீம் என்று சொல்லி விளையாடுவான். அபியும் நானும் சில நேரங்களில் தோட்டத்தை ஒரு முறை சுற்றி வருவோம். அபிக்கு மண்வெட்டி வைத்து தோண்டி விளையாடுவதும் பிடிக்கும்.
கோலம் போட்டு விளையாடுவதையும் மிகவும் விரும்புவான். திருக்கார்த்திகை அன்று அவனுடைய அம்மா போட்ட கோலத்தை மிகவும் ரசித்து பார்த்தான். அன்று என்னுடைய அம்மாவும் வந்திருந்தாங்க.திருக்கார்த்திகை அன்று இனிப்பு கொழுக்கட்டை செய்து சாமிக்கு படைத்தது அபியுடன் நாங்கள் எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடினோம்.


தினமும் என்னுடன் கடைக்கு வந்து ஒரு கிண்டர் ஜாய் வாங்கி கொள்வான். ஒரே கடையில் வாங்குவதால் அந்த கடைக்கு same shop என்று பெயர் வைத்திருந்தான். எங்கள் தெருவில் கிறிஸ்தவர்கள் நிறைய பேர் இருப்பதால் எல்லோருடைய வீட்டிலும் ஸ்டார் போட்டிருந்தார்கள். அபியும், நானும் எனது மகளும் சூப்பர் மார்க்கெட் சென்று ஸ்டார் வாங்கி எங்கள் வீட்டிலும் போட்டிருந்தோம். மேலும் சில கடைகள், பொருட்காட்சி என்று அவனுடன் சென்று வந்தோம்.
டிசம்பர் மாதம் அபிநவ் அப்பாவும் இங்கு வந்துட்டாங்க. அப்பாவுடன் அபிநவ் சந்தோஷமாக பொழுதை கழித்தான். எனக்கும் எல்லோரும் இங்கு இருந்தது நேரம் போனதே தெரியவில்லை.
பொங்கலுக்கு கடைக்கு சென்று எல்லோருக்கும் டிரெஸ் வாங்கி வந்தோம். அபிக்கு வேஸ்டி, சட்டை, அங்கவஸ்திரம் என்று செட் ஆக எடுத்தோம்.
அபிநவ் பொங்கல் டிரெஸ்சில்
பொங்கல் முடிந்தவுடன் மகள், மருமகன், பேரன் எல்லோரும் ஊருக்கு சென்று விட்டார்கள். என்னுடைய சந்தோஷத்தை உங்கள் எல்லோரிடம் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றி
சாரதா