![]() |
தேவையான பொருள்கள் -
- இடியப்பம் - 4
- லெமன் சாறு - 3 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- மிளகாய் வத்தல் - 2
- பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2
- கடுகு - 1 தேக்கரண்டி
- கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- இடியாப்பத்தை உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றவும். பிறகு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கடலைப்பருப்பு, மிளகாய்வத்தல், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பிறகு உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை சேர்த்து நன்றாக கிளறி இறுதியில் லெமன் சாறு சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும். சுவையான லெமன் சேவை ரெடி.