Tuesday, July 4, 2017

மசாலா சுண்டல் / Masala Sundal


தேவையான பொருள்கள் -
  1. கொண்டைக்கடலை - 1/2 கப் 
  2. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி 
  3. உப்பு - தேவையான அளவு 
வறுத்து பொடிக்க -
  1. மிளகாய் வத்தல் - 2
  2. கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி 
  3. கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி 
  4. சோம்பு - 1 தேக்கரண்டி 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு குக்கரில் 4 விசில் வரை வைத்து வேக வைத்து தண்ணீரை வடித்து விடவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, கடலைப்பருப்பு, சோம்பு எல்லாவற்றையும் போட்டு லேசாக வறுத்து சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு மிக்சியில் திரிக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும்.
  4. பிறகு அதனுடன் அவித்து வைத்துள்ள கொண்டைக்கடலை, மற்றும் உப்பு சேர்த்து கிளறி அதனுடன் சுண்டல் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்.
  5. இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான மசாலா சுண்டல் ரெடி. காபி, டீயுடன் பரிமாறவும்.

10 comments:

  1. ஸூப்பர் சுண்டல் சகோ.

    ReplyDelete
  2. மசாலா சுண்டல் எப்பொழுதுமே அருமை!..

    ReplyDelete
  3. அருமையான சுணடல்

    ReplyDelete
  4. தின்னாப் பிடிக்கும் சூடான சுண்டல்.. சுவையான சுண்டல்....

    ReplyDelete
  5. இது
    நீரிழிவுக்காரருக்கு
    நல்ல மருந்தெல்லோ?

    ReplyDelete
  6. செய்து பார்த்தேன்.. அமர்க்களம்.
    செய்முறைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்து சொன்ன கருத்துக்கு நன்றி.

      Delete
  7. சோம்பு இல்லாமல் செய்தேன். (சோம்பு என்றால் என்னவென்றே தெரியாது அதான் :-).

    ReplyDelete
  8. சோம்பு என்றால் பெருஞ்சசீரகம் அடுத்த தடவை செய்யும் போது சேர்த்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...